எடப்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை..! ஆவணம் இல்லாமல் ஒரு லட்சம் பறிமுதல்..!!

எடப்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை..! ஆவணம் இல்லாமல் ஒரு லட்சம்
பறிமுதல்..!!

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்த போது, ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது…

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நகராட்சி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முதல் நாளான இன்று எடப்பாடி நகராட்சி பகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால், தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் பேருந்து நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது எடப்பாடி அடுத்த கோரணம்பட்டி கிராமம் வாழகுட்டபட்டியை சேர்ந்த தர்மன் என்பவர் வாகனத்தை சோதனையிட்டபோது, முறையான ஆவணம் இன்றி ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நகராட்சி ஆணையாளரும், தேர்தல் அலுவலருமான சேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks