USA Iran War Peace Deal: அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதும், ஹார்மஸ் நீரிணை திறக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜுன்.19ம் தேதி அமைதி ஒப்பந்தம்:

அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இறுதியாகியுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதையடுத்து இருநாடுகளுக்கு இடையே 107 நாட்களாக நீடித்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம், வரும் ஜுன் 19ம் தேதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகிறது எனவும் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஹார்மஸ் நீரிணை உலக பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நீரிணை வழியாக தான் சர்வதேச நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் அறிவிப்பு என்ன?

சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் தற்போது முழுமையடைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள். இதன் மூலம் ஹார்மஸ் நீரிணை திறக்கப்படுவதோடு, ஈரான் துறைமுகத்தை அமெரிக்க கடற்படை முடக்கி வரும் பணிகளும் முடிவுக்கு வரும். உலக நாடுகளின் கப்பல்கள் தங்களது இன்ஜின்களை ஸ்டார்ட் செய்யுங்கள். எண்ணெய் விநியோகம் தொடரட்டும். இந்த மாபெரும் ஒப்பந்தம் இப்பிராந்தியம் முழுவதற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். பல அதிபர்கள் ஈரானுடன் சமாதானம் செய்ய முயன்றனர், ஆனால் எனக்கு முன்பு அவர்கள் அனைவரும் தோல்வியுற்றனர். பிராந்தியத்தின் தலைவர்கள், முதல் முறையாக, உண்மையான அமைதியை அடைய தங்களுக்கு உதவக்கூடிய ஒரு அதிபரை கண்டறிந்துள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தாகி, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடங்கியவுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரு திசைகளிலும் எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்கும். இது பிராந்தியத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும்” என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article