US Iran War: எல்லாம் முடிஞ்ச்..! ஒரு ரூபாய் கொடுக்காம போர் ஓவர், ஈரான் உடன் இன்று அமைதி ஒப்பந்தம் - ட்ரம்ப்

US Iran War: எல்லாம் முடிஞ்ச்..! ஒரு ரூபாய் கொடுக்காம போர் ஓவர், ஈரான் உடன் இன்று அமைதி ஒப்பந்தம் - ட்ரம்ப்
News Image

US Iran War Trump: அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுகிழமை கையெழுத்தகௌம் என்ற ட்ரம்பின் அறிவிப்பை ஈரான் உடனடியாக மறுத்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இன்று ஒப்பந்தம்?

ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அன்று கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அசாதாரண சூழல் முடிவுற்று, ஹார்மஸ் திறக்கப்பட்டு சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகம் சீரடையும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், ட்ரம்பின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ஈரான் நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. இதனால் இந்த போர் இன்றுடன் முடிவுக்கு வருமா? அல்லது மேலும் நீடிக்குமா? என்ர குழப்பம் நீடிக்கிறது.

ஈரானுக்கு அணு ஆயுதம் கிடையாது - ட்ரம்ப்

சமூக வலைதள கணக்கில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ ஈரானுடன் பராக் ஹுசைன் ஒபாமா செய்துகொண்ட ஒப்பந்தமான JCPOA, அணு ஆயுதத்தை அடைவதற்கான ஒரு எளிதான, அழகான மற்றும் தடையற்ற பாதையாக இருந்தது. அந்த ஒப்பந்தம் தொடர்ந்திருந்தால், ஈரான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதத்தைப் பெற்றிருக்கும், மேலும் இந்நேரத்திற்குள் அதைப் பயன்படுத்தியுமிருக்கும். ஈரானுடனான எனது ஒப்பந்தம் இதற்கு நேர்மாறானது.  இது அணு ஆயுதமே இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் ஒரு வலுவான தடுப்புச் சுவரைப் போன்றது. சொல்லப்போனால், அவர்களுக்கு இனி அணு ஆயுதம் தேவையில்லை; வாங்குதல், சொந்தமாகத் தயாரித்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அவர்கள் அணு ஆயுதத்தைப் பெறப்போவதில்லை.

”செறிவூட்டப்பட்ட யுரேனியம் அமெரிக்காவிற்கு”

இந்த ஒப்பந்தம் நாளை (ஞாயிறு) கையெழுத்தாக உள்ளது. கையெழுத்தான உடனேயே, ஹார்முஸ் நீரிணை (Hormuz Strait) அனைவரின் பயன்பாட்டிற்கும் திறந்துவிடப்படும். முந்தைய நிர்வாகங்கள் கொண்டிருந்த உறவை விட, ஈரானுடனான எங்கள் உறவு மிகவும் மாறுபட்டதாகவும் சிறப்பானதாகவும் உள்ளது. ஒபாமா, அவர்களுக்கு வழங்கிய பல நூறு பில்லியன் டாலர்கள் (இதில் 1.7 பில்லியன் டாலர் ரொக்கப் பணமும் அடங்கும்) போலன்றி, இந்த ஒப்பந்தத்தில் பணப் பரிமாற்றம் எதுவும் இருக்காது. சூழல் அமைதியான பிறகு, சரியான நேரத்தில், எங்கள் அற்புதமான B-2 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் திறமையான விமானிகளின் உதவியுடன், ஆழமான கிரானைட் மலைகளுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள அணுசக்திப் பொருட்களை (Nuclear Dust) நாங்கள் கைப்பற்றுவோம்; பின்னர் அவற்றை ஈரான் அல்லது அமெரிக்கா என எங்கு வேண்டுமானாலும் வைத்து, அவற்றின் வீரியத்தைக் குறைத்து அழித்துவிடுவோம்.

ட்ரம்ப் வார்னிங்

எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு ஈரானுடனும், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்துடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். திட்டமிட்டபடி இந்த பணி நடைபெறவில்லை என்றால் எங்களுக்கு மாற்று வழியும் தெரியும். அவற்றை கையிலெடுக்க வேண்டிய அவசியம் வராது என எதிர்பார்க்கிறேன்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: VCK Thirumavalavan: ”விஜயின் அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் விலகுவோம்” விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி

ஈரான் மறுப்பு

ட்ரம்பின் அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்தில் ஈரான் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்கலின்படி, “அமைதி ஒப்பந்தம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒப்பந்தமாக வாய்ப்பில்லை. அடுத்த சில நாட்களில் கையெழுத்தாகலாம்” என கூறப்பட்டுள்ளது. அதேநேரம், அமைதி ஒப்பந்தத்திற்கு ஈடாக அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதார தடைகளைத் தளர்த்தும், வரம்புடன் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை அனுமதிக்கும்,விதிமுறைகளுக்கு இணங்கும் நிபந்தனைகளின் பேரில் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை அணுகுவது குறித்தும் பரிசீலிக்கும் என கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks