தவெக அரசு பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசமின்றி வாக்குறுதிகள் அளிப்போம் என்று உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்காக சிங்கப்பெண் சிறப்பு படை என்ற காவல்துறை பிரிவையும் உருவாக்கியுள்ளது.

ஆலந்தூரில் தவெக பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாலியல் வன்கொடுமை:

புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.

புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.

சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.…

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 14, 2026

எப்படி நன்றாக இருப்பது?

இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா?
தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்?

உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்?

நியாயமான விசாரணை:

மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் குற்றச்சாட்டு அடுத்தடுத்து எழுந்து வருவது அந்த அரசுக்கு தொடர் நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது. இந்த குற்றச்சாட்டு சம்பவங்கள் தொடர்பாக நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Source: Read Full Article