தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தவெக

தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.O ஆட்சி அமைக்கப்படும் என திமுக தலைமை நம்பியிருந்த நிலையில், திடீர் திருப்பமாக கடந்த 2024ஆம் ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், இரண்டு ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் தனித்து களம் இறங்கிய விஜய், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை கூட பார்க்காத மக்கள் விஜய் என்ற முகத்திற்காக விசில் சின்னத்தில் மட்டுமே வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். இந்த நிலையில் ஆட்சியை இழந்து திமுக எதிர்கட்சியாக உள்ளது. அதே நேரம் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சியாக இருந்தது.

அதிமுக டூ தவெக

2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கொத்து கொத்தாக தவெகவிற்கு பல்டி அடித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த 4 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதே போல அதிமுக மாஜி அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, சிவபதி, பச்சைமால், எம்.சி.சம்பத் உள்ளிட்டவர்கள் இணைந்த்து மட்டுமில்லாமல் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களும் தவெகவை நோக்கி படையெட்டு வருகிறார்கள்.

திமுகவில் மோசமான தோல்வி

இதே போல பாஜகவின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்களும் தவெகவில் இணைந்து வருகிறார்கள். ஆனால் திமுகவில் இருந்து எந்தவித நிர்வாகிகளும், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவிற்கு செல்லாமல் திமுகவிலேயே உறுதியாக இருந்து வருகிறார்கள். இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், கடந்த 2011ஆம் ஆண்டு திமுக மிகப்பெரிய தோல்வியை தேர்தலில் சந்தித்தது. எதிர்கட்சி கூட இல்லை. வெறும் 23 எம்எல்ஏக்கள் மட்டுமே திமுகவில் இருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்தது. அப்போது கூட திமுக நிர்வாகிகள் அதிமுகவிற்கோ மாற்றுக்கட்சிக்கோ செல்லவில்லை. அதிலும் திமுகவில் இருந்த சென்ற ஒரு சிலர் திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் மட்டுமே அதிமுகவில் இணைந்தனர்.

மாற்று கட்சிக்கு பல்டி அடிக்காத திமுகவினர்

இதனையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக நூலிலையில் தோல்வியை சந்தித்தது. அப்போது கூட திமுகவினர் யாரும் வேறு கட்சிக்கு பல்டி அடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது திமுகவினர் ஆட்சியில் இருப்பதை விட ஆட்சியில் இல்லாத போது எதிர்கட்சியாக சிறப்பாக செயல்படுவார்கள். கட்சி தலைமையும் நிர்வாகிகளுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து பிஸியாக வைத்திருக்கும், தொடர் போராட்டங்கள், சிறை நிரப்பும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிர போராட்டம், மாவட்ட அளவிலான கூட்டம், மாநில அளவிலான கூட்டம் என களத்தில் இறங்கி அடித்து ஆடும்.

திமுகவை கட்டமைத்த கருணாநிதி

இது மட்டுமில்லாமல் கட்சிக்காக யார் உண்மையாக உள்ளார்களோ அவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசியலில் நல்லவனாக இருக்க கூடாது, வல்லவனாக இருக்க வேண்டும் என்பதே கருணாநியின் பார்வை, உழைக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும், கூடவே இருக்க வேண்டும் என்ற முக்கிய அம்சங்களை பார்த்து பார்த்து தான் திமுகவை கருணாநிதி வடிவமைத்தார். அந்த கட்டமைப்பை ஸ்டாலினும், உதயிநிதி அப்படியே பராமரித்து வருகிறார்கள். இதுவே திமுகவின் ஒரு செங்கலை கூட உருவ முடியாததற்கு காரணமாக கூற்ப்படுகிறது.

Source: Read Full Article