தஞ்சாவூரில் அமையவுள்ள உள்நாட்டு விமான நிலையத் திட்டப் பணிகள் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் “உடான்” திட்டம்

கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது. அதில் ஒன்று தான் 2016ல் செயல்பட தொடங்கிய உடான் திட்டம். இதன்மூலம் சாதாரண மக்களும் இந்தியாவில் விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற இலக்கோடு சிறிய மற்றும் நடுத்தர நகரங்களை இணைக்கும் வகையில் விமான சேவையை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் உள்ளூரின் சுற்றுலா, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு போன்றவை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூரில் விமான நிலையம்

இந்த நிலையில் உடான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது தஞ்சாவூரில் இந்திய வான்படைத் தளம் மட்டும் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து நேரடியாக விமான சேவை என்பது இல்லை. திருச்சி சென்று தான் விமான பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அங்கு விமான நிலையம் கொண்டு வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: TVK Vijay: வன்மத்தில் வடை சுடும் ஸ்டாலின்.. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்த குடும்பம்.. தவெக சரமாரி விமர்சனம்!

இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குநர் எஸ்.எஸ். ராஜு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரூ.100 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூரில் விமான நிலையம் அமையவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை நிர்வாக அனுமதிக்காகவும், நிதி ஒப்புதலுக்காகவும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே 55 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் போன்ற டயர் 3 நகரங்களுக்கு உள்நாட்டு விமான நிலையம் அமைப்பது ஒரு சிறந்த மேம்பட்ட திட்டம் எனவும் ராஜூ தெரிவித்தார். தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தில் அமைக்கப்படும் இந்த புதிய விமான நிலையத்தில் 3 உள்நாட்டு விமானங்கள் நிறுத்துவதற்கான இடவசதி இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக உள்நாட்டுப் பயணிகளின் சேவைக்கு உதவும் வகையில் ஒரு நிர்வாகக் கட்டிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகளைக் கட்ட திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ”திருச்சி சர்வதேச விமான நிலையம் பற்றி பேசிய இயக்குநர் ராஜூ, ‘ரூ.60 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள 53 மீட்டர் உயர வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் பணிகள் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விமான நிலைய ஓடுபாதையை 8000 அடியிலிருந்து 12 ஆயிரம் அடியாக விரிவுப்படுத்தும் வகையில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article