ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக பல முன்னேற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்காக தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி வரைவில், பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, செய்தி நிறுவனம் ஒன்றிடம், ஒரு மூத்த ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரானிய அதிகாரி கூறியது என்ன.?

டெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் முதல் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது வரையிலான முக்கிய பிரச்னைகள் அதில் அடங்கும். இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தவுடன், இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த 60 நாட்களுக்கு நடைபெறும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பரந்த அளவிலான பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளது என்று ஈரானிய அதிகாரி தெரிவித்தார்.

மேலும், ஈரான் அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்காகவும் ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக மீண்டும் திறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவும் ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை நீக்கியுள்ளது.

அமெரிக்கா ஈரான் மீது எந்த புதிய தடைகளையும் விதிக்காது

இறுதி உடன்பாடு எட்டப்படும் வரை, ஈரான் மீது புதிய தடைகளை விதிக்கப் போவதில்லை என அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் எண்ணெய் விற்பனை செய்து வருவாய் ஈட்ட அனுமதிக்கும் வகையில், அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஈரான் மீதான எண்ணெய் தடையை தளர்த்தும். முடக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்களை விடுவிக்கவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இதில் நேரடி பணப் பரிமாற்றங்கள், பிராந்திய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நிதிக் கடன் வசதிகள் ஆகியவை அடங்கும்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது

அணு ஆயுதங்களை உருவாக்கவோ அல்லது கையகப்படுத்தவோ கூடாது என டெஹ்ரான் ஒப்புக்கொண்டுள்ளது. யுரேனியத்தை செறிவூட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் தனது அணுசக்தி நிலையங்களை விரிவுபடுத்துவதைத் தவிர்ப்பது உட்பட, இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை அணுசக்தி விவகாரங்களில் தற்போதைய நிலையையே பராமரிக்க டெஹ்ரான் ஒப்புக்கொண்டுள்ளது.

ஈரானுக்குள் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பை டெஹ்ரான் குறைக்கும் என்பதையும், அவ்வாறு செய்வதற்கான வழிமுறை 60 நாட்களுக்குள் விவாதிக்கப்படும் என்பதையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்.?

இதனிடையே, அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம், ஞாயிறன்று கையெழுத்தாகும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளர். ஆனால், ஈரான் தரப்பிலிருந்து அது உறுதி செய்யப்படவில்லை. ஒப்பந்தத்தை எட்டும் நிலை உள்ளது, ஆனால் ஞாயிறன்றே அது நடைபெறுமா என்பது உறுதி கிடையாது என்றும், வேறு ஒரு நாளில் கூட அமைதி ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக எதையாவது அறிவித்துவிட்டு, அதன்பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதே ட்ரம்ப்புக்கு வாடிக்கையாகிவிட்டது. இந்த ஒப்பந்த விஷயத்திலும் அப்படியே நடக்கிறது. ஆனால், எப்படியும் வரும் வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று நம்புவோம்.

Source: Read Full Article