VCK Thirumavalavan: ”விஜயின் அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் விலகுவோம்” விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி

VCK Thirumavalavan: ”விஜயின் அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் விலகுவோம்” விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி
News Image

VCK Thirumavalavan: முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு, விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவனின் பேச்சால் தவெக ஷாக்..!

தமிழ்நடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தாலும், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தால் தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. இதையடுத்து திமுக கூட்டணியில் நின்று தேர்தலை எதிர்கொண்ட, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சரானார். இதையடுத்து தங்களது கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளை திமுக மிகவும் மோசமாகவும், கடுமையாகவும் விமர்சித்து வருகிறது. பதிவி மற்றும் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு சென்று விட்டதாகவும் சாடி வருகிறது. இந்நிலையில் தான், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் வெளியே வரலாம் என, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தமிழக வெற்றிக் கழகத்தினரை அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது.

”அமைச்சரவையில் இருந்து வெளியே வரலாம்”

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திருமாவளவன், “ஏற்கனவே இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. தற்போது திருமாவும் அதே முடிவை எடுப்பது நமக்கு எந்த நேரத்திலும் பிரச்னை தான். திடீரென ஆதரவை திரும்பப் பெற்றால் என்ன செய்வது? ஆதரவு தந்துகொண்டே திமுக கூட்டணியில் தொடர்வதாக திருமா பேசுகிறாரா? என கவலை கொண்டனர். அதனால் தான் அமைச்சரவையில் இடம்பெற்றோம். ஆனால், வெறுமென ஆதரவு கொடுத்து தனியே இருக்க விரும்புகிறோம். அப்படி இருக்கக் கூடாதா? ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தோம், அதற்கு பரிசாக தவெக அமைச்சரவையில் இடம்கொடுத்தது. எந்த நேரத்திலும் நாங்கள் அமைச்சரவையில் இருந்து கூட வெளியே வரலாம். எனவே அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்டோம் என்ற காரணத்தினாலேயே, தவெக கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று பொருள் கிடையாது. நாங்கள் இன்னும் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவில்லை. இது தான் உண்மை. அப்படி அரசியல் செய்ய முடியும். அப்படி ஒரு நிலைப்பாட்டையும் எங்களால் எடுக்க முடியும்” என திருமாவளவன் பேசியுள்ளார்.

கூட்டணியில் சேராத விசிக

விஜய் தனது முதல் மாநில மாநாட்டிலேயே, தவெக ஆட்சி அமைந்தால் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பேன் என உறுதி அளித்தார். ஆனால், எந்த கட்சிகளும் அவருடன் கூட்டணி அமைக்கவில்லை. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க மிகவும் ஆர்வம்காட்டினார். ஆனால், அதனை நிராகரித்த திருமாவளவன்,விஜயையும் அவரது தவெகவையும் ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைகள் என கடுமையாக சாடினார். அதேநேரம், தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக, தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

பின்பு, தவெகவின் கோரிக்கையை ஏற்று அமைச்சரவையில் சேர முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் விசிக தேர்தல் களம் கண்ட 27 ஆண்டுகளில் முதல்முறையாக, அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் அதாவது வன்னியரசு அமைச்சரானார். சமூக நீதி இலாகாவை கவனித்து வருகிறார். ஆனாலும், காங்கிரசைப் போன்று தவெகவுடனான கூட்டணியில் இணைந்துவிட்டதாக விசிக அறிவிக்கவில்லை. இந்நிலையில் தான், எந்த நேரத்திலும் அமைச்சரவையில் இருந்தும் கூட விசிக வெளியேறும் என திருமாவளனவ் பேசியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks