மதுரை மாவட்டத்தில் செயல்படும் அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ.வுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பயன்படுத்தும் காய்கறிகள் அழுகிப்போன நிலையில் இருந்ததால் அவர் அதிருப்தியடைந்தார்.

அம்மா உணவகங்கள்

கடந்த 2013ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசால் அம்மா உணவகங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை அப்போதைய முதலமைச்சராக இருந்த மறைந்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இத்திட்டம் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், உலக நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமான திட்டமாக அமைந்தது. ஏழை,எளிய மக்களின் பசியை போக்கிடும் வகையில் மலிவு விலையில் உணவு என்பது தான் அம்மா உணவகங்களின் இலக்காக இருந்தது.

ரூ.1க்கு இட்லி, ரூ.3க்கு சப்பாத்தி, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம், ரூ.5க்கு சாம்பார் சாதம் என கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மா உணவகங்கள் இதே விலைப்பட்டியலில் தான் இயங்கி வருகிறது. வீடில்லாமல் நாடோடியாக வாழும் மக்கள் தொடங்கி பொருளாதார வசதி படைத்தவர்கள் வரை அம்மா உணவகங்கள் மூலம் தங்கள் பசியை போக்கியுள்ளனர். இத்தகைய அம்மா உணவகங்கள் கடந்த திமுக ஆட்சியில் பெரிய அளவில் மேம்படுத்தப்படவில்லை. ஆட்சி மாறியதும் அம்மா உணவகங்களை மூடும் முடிவில் திமுக அரசு இருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவை கைவிடப்பட்டது.

இதற்கிடையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதற்கேற்ப பணிகள் சென்று கொண்டிருக்கிறது. மேலும் உணவு தரமாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இதனால் தவெக எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் என பலரும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக எம்.எல்.ஏ.வுக்கு கிடைத்த அதிர்ச்சி

அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., விஜய் அங்குள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள் பல அழுகிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைக் கண்டு விஜய் அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக அந்த அம்மா உணவகத்தின் பொறுப்பாளரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு இப்படித்தான் காய்கறி கொண்டு வந்து போடுகிறார்கள் என பதில் சொல்ல அவரை எம்.எல்.ஏ. விஜய் எச்சரிக்கை விடுத்தார். தனிநபர் விஷயம் என்றால் பிரச்னையில்லை. இங்கு பல தரப்பட்ட மக்கள் வருகை தருகிறார்கள். அழுகிய காய்கறியை பயன்படுத்தி யாருக்காவது பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். எல்லாமே கெட்டுப்போன காய்கறியாக மட்டும் தான் இருக்குது. இதைப்பற்றி எங்களுக்கு ஏன் புகார் கொடுக்கவில்லை எனவும் கேட்டார். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரம் கேட்டறிந்தார். பின்னர் அங்கு உணவை சாப்பிட்டு தரம் பார்த்தார்.

Also Read: TVK Vijay: வன்மத்தில் வடை சுடும் ஸ்டாலின்.. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்த குடும்பம்.. தவெக சரமாரி விமர்சனம்!

கேள்விக்குள்ளாகும் உணவின் தரம்

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 620 அம்மா உணவகங்களின் உணவின் தரத்தை கேள்வியெழுப்பியுள்ளது. உடனடியாக அரசு தலையீட்டு பொதுமக்களின் உயிருடன் விளையாடும் இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source: Read Full Article