தினம் தினம் திமுக அழுகை.. உதயநிதி என்ன சுதந்திர போராட்ட தியாகியா? - கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்!

தினம் தினம் திமுக அழுகை.. உதயநிதி என்ன சுதந்திர போராட்ட தியாகியா? - கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்!
News Image

கவர்ச்சியை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்து விட்டதாக சொல்லும் உதயநிதி ஸ்டாலின் என்ன சாதனை செய்தார் என அமைச்சர் ரமேஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ரமேஷ், ஆதவ் அர்ஜூனா, சரத்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை சமீபத்தில் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ், “திமுகவுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல.. தினம் தினம் அழுதுட்டு இருக்காங்க. மேடை ஏறினாலே அழுகிறார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்வில் பேசும்போது, நீங்கள் (தவெக) கட்சி ஆரம்பிச்சி 2 வருடம் தான் ஆகிறது. என்ன செய்து விட்டீர்கள்?, கவர்ச்சியை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்து விட்டீர்கள். என்ன சேவை செய்தீர்கள்?, போராட்டம் நடத்துனீங்களா? என கேட்கிறார். இப்போது நான் கேட்கிறேன். உதயநிதி ஸ்டாலின் என சுதந்திர போராட்ட தியாகியா?.. நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?.. சுதந்திரத்துக்காக செக்கிழுத்தீர்களா?.. காந்தியைப் போல கதர் ஆடை அணிந்துக் கொண்டு இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்தீர்களா?.. அகிம்சை வழியில் போராடினீர்களா?.. மாபெரும் படையை திரட்டி சுபாஷ் சந்திரபோஸ் போல போரிட்டாரா? என அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் தலைவர் விஜயாவது திரைத்துறையில் உச்சபட்ச நடிகராக மாறிவிட்டு தான் அரசியலுக்கு வந்தார். நீங்கள் துணை முதலமைச்சராவதற்கு முன்னால் அப்படி என்ன சாதனை செய்தீர்கள்?.. அப்ப யார் யாரைப் பார்த்து கேள்வி கேட்பது.. 30 வருடம் ரசிகர் மன்றம், நற்பணி மன்றம், மக்கள் இயக்கமாக மக்களோடு நின்று சேவை செய்து அவர்களுக்காகவே வாழ்ந்தவர் இன்றைய முதலமைச்சர் விஜய் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

Also Read: தவெக ஆதரவில் இருந்து பின்வாங்குகிறதா விசிக? - திருமா எடுத்த முடிவு.. ஆதவ் அர்ஜூனா ஓபன் டாக்!

இதே நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா, 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் திமுக, அதிமுக என்ற 50 வருட வரலாறு முடிந்து விட்டது. திமுகவில் மு.க.ஸ்டாலின் தோல்வியையாவது பற்றி ஆலோசனை செய்கிறார்கள். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தன் தொகுதியில் தவெக வேட்பாளரை விலை கொடுத்து வாங்கியது தான் மிகப்பெரிய சூழ்ச்சி. இதனால் தான் அதிமுகவில் இருப்பவர்கள் தவெகவை நோக்கி வருகை தருகிறார்கள். திமுகவும், அதிமுகவும் என்றைக்கோ ஒன்று சேர்ந்து விட்டது. எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுனை கட்சிக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். உதயநிதி ஸ்டாலினும், மிதுன் பழனிசாமியும் இணைந்து கூடிய சீக்கிரம் ஒரு இணைப்பு விழா நடத்துவார்கள். 2029க்கு முன்னால் இது நடக்கலாம்" என தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks