IAF Plane Crash: அசாமில் அதிர்ச்சி.! விபத்துக்குள்ளான இந்தி விமானப்படை விமானம்; 5 வீரர்கள் பலியான சோகம்
IAF Plane Crash: அசாமில் அதிர்ச்சி.! விபத்துக்குள்ளான இந்தி விமானப்படை விமானம்; 5 வீரர்கள் பலியான சோகம்
News Image
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் தரையிறங்கும்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
ரௌரியா பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில், 43 ஸ்குவாட்ரனைச் சேர்ந்த ஏஎன்-32 ரக விமானம் ஒன்று சரக்குகளை ஏற்றிச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்துக்குப் பிறகு விமானம் இரண்டாக உடைந்து, பின்னர் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
#WATCH | Jorhat, Assam | Multiple fire engines seen outside the Jorhat Air Force station in Assam, where an AN-32 transport aircraft of the Indian Air Force crashed this morning.
Five Indian Air Force personnel lost their lives in the crash. The co-pilot survived and is being… pic.twitter.com/pA1RJ5HeDw
— ANI (@ANI) June 13, 2026
ஸ்குவாட்ரன் லீடர் பிரஷாந்த் சிங், ஃப்ளைட் லெப்டினன்ட் ஷுபம் குமார், சார்ஜென்ட் ஜிதேந்திர சர்மா, அக்னிவீர் கேமரம் குமாவத் மற்றும் அக்னிவீர் டேனிஷ் ஆலம் ஆகியோர் கடமையின்போது தங்கள் உயிரைத் தியாகம் செய்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த துயர நேரத்தில் அவர்களது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை உறுதுணையாக நிற்கும் என்றும் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளது.
The Indian Air Force deeply regrets the loss of five personnel in the An-32 accident at Jorhat, Assam.
Sqn Ldr Prashant Singh, Flt Lt Shubham Kumar, Sgt Jitendra Sharma, Agniveervayu Khemaram Kumawat and Agniveervayu Danish Alam made the supreme sacrifice in the line of duty.… pic.twitter.com/9SmOjtS5mU
— Indian Air Force (@IAF_MCC) June 13, 2026
Deeply anguished by the loss of five Air Warriors in the An-32 accident at Jorhat, Assam.
Sqn Ldr Prashant Singh, Flt Lt Shubham Kumar, Sgt Jitendra Sharma, Agniveervayu Khemaram Kumawat and Agniveervayu Danish Alam made the supreme sacrifice in the line of duty. Their courage… https://t.co/eChXozjT85
— Rajnath Singh (@rajnathsingh) June 13, 2026
விபத்தில் உயிர் தப்பிய துணை விமானி
விபத்து நடந்த நேரத்தில், அந்த விமானம் அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஜோர்ஹாட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், துணை விமானி உயிர் தப்பி, தற்போது சிகிச்சை பெற்று வருவதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தைத் தொடர்ந்து, அதற்கான காரணத்தை கண்டறிய ஒரு விசாரணைக் குழுவை அமைக்க இந்திய விமானப்படை உத்தரவிட்டது.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks