ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து துறை ஊழியர்களும் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு படிகளைத் திருத்தி அமைப்பதற்காக அமைக்கப்பட்ட 8வது ஊதியக்குழு தற்போது ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகளுடன் தொடர் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் பிற பொருளாதாரக் காரணிகளைக் கருத்தில் கொண்டு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இந்த குழுவானது மத்திய அரசிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகள், சம்பள நிர்ணயம், சலுகைகள் மற்றும் வேலைப் பாதுகாப்பு தொடர்பான பல கோரிக்கைகளை ஊதியக் குழுவிடம் முன்வைத்துள்ளன. இந்த சந்திப்பில் மத்திய அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்படும் விஷயம் fitment factor எனப்படும் பொருத்த காரணியாகும். இதுதான் புதிய சம்பளம் வரைமுறை மற்றும் ஓய்வூதிய தொகையை நிர்ணயிக்கும் காரணியாகும்.

<iframe title="Child Safety in TVK Govt |”வாய் திறங்க CM விஜய்”கொந்தளிக்கும் மக்கள்! | Vijay" src="https://www.youtube.com/embed/8fZ-_MYJvFk" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இந்த சந்திப்பில் மத்திய அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்படும் விஷயம் fitment factor எனப்படும் பொருத்த காரணியாகும். இதுதான் புதிய சம்பளம் வரைமுறை மற்றும் ஓய்வூதிய தொகையை நிர்ணயிக்கும் காரணியாகும். அதாவது ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்ற கணக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தை வைத்து கணக்கிடுவதாகும். 6வது ஊதியக் குழு குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை ₹3,050-லிருந்து ஏறக்குறைய ₹7,000 ஆக உயர்த்தியது. 7வது ஊதியக் குழு ₹7,000-லிருந்து ₹18,000 ஆக உயர்த்தியது. இதில் கீழ்நிலை ஊழியர் தொடங்கி அமைச்சரவை ஊழியர் ஒரே அளவு ஊதியம் பெற்றனர். 8வது ஊதியக் குழு அடிப்படையில் தங்களுக்கு என்ன மாதிரியான ஊதிய உயர்வு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

Also Read: Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?

அப்படியாக இந்த ஊழியக்குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ.34,560ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ம். உயர் பதவியில் உள்ள ஊழியர்களின் சம்பளம், அந்தந்த ஊதிய மட்டத்திற்கு ஏற்ப அதிக விகிதத்தில் திருத்தி அமைக்கப்படும். மேலும் அடிப்படை ஊதிய உயர்வைத் தவிர வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி, மற்றும் பிற படிகளில் திருத்தம் குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியைச் சேர்ப்பதில் உள்ள பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் அதனை அமல்படுத்த இன்னும் ஓராண்டாகலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் மத்திய அரசு சுமார் 18 முதல் 24 மாதங்களுக்கு நிலுவைத்தொகையை விடுவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article