PM Modi Trump Meet: பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்

PM Modi Trump Meet: பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
News Image

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சந்தித்துக் கொண்டனர். ரஷ்யா-உக்ரைன் போரை குறிப்பிட்டுப் பேசிய ட்ரம்ப், உலகளவில் 8 போர்களை தாம் தடுத்து நிறுத்தியுள்ளதாக மீண்டும் கூறினார். அவர், "நான் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அதிபர் புதின் ஆகியோருடன் பேசினேன். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நான் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். வெளிப்படையாக சொல்வதானால், இது மிகவும் எளிதான போர்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஒருவரையொருவர் விரும்பாததால், இது மேலும் கடினமாகிறது," என்று கூறினார்.

இந்திய மாலுமிகள் மீதான தாக்குதல் பிரச்னையை எழுப்பிய பிரதமர் மோடி

இந்த சந்திப்பில், கத்தார் கடற்கரைக்கு அப்பால் இந்திய மாலுமிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்த பிரச்னையை பிரதமர் மோடி எழுப்பினார். அது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், "கடல்சார் வர்த்தக உலகில், லட்சக்கணக்கான இந்திய மாலுமிகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு கடல்களில் பணியாற்றி, உலகளாவிய முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் சம அளவில் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். இந்த அமைதி முயற்சியில் நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளீர்கள். மேலும், இந்த ஒப்பந்தம் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.

#WATCH | Evian, France: On the Russia-Ukraine war, US President Donald Trump says, "I talked with President Zelensky, and I talked with President Putin. We would like to see that one end. I ended 8 wars, and to be honest with you, this would have been one of the easiest ones, but… pic.twitter.com/5bKp084tdr
— ANI (@ANI) June 17, 2026

ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருப்பது முக்கியம்: பிரதமர் மோடி

மேலும், "உலகப் பொருளாதாரத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வைத்திருப்பது அவசியம் என்பதை நீங்களும் நானும் ஒப்புக்கொள்கிறோம். கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாம் எப்போதும் கூறி வருகிறோம். மேலும், இதை நாம் அனைவரும் கூட்டாக வலியுறுத்தியுள்ளோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் இந்தியா ஒரு பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா என ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்டபோது, ​​"ஆம், நான் நம்புகிறேன். எல்லாவற்றிலும் இந்தியா ஒரு பெரிய பங்கை வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி தலைவராக இருக்கும் வரை, இந்தியா ஒரு பெரிய பங்கை வகிக்கும்" என்று அவர் பதிலளித்தார்.

தாம் 8 முதல் பத்து போர்களை நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் பல்வேறு மேடைகளில் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆகஸ்ட் 2025-ல், 6 போர்களை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறினார். மேலும், "நான் அதிபராக இருக்கும் வரை, அவர்களுக்கு (இந்தியாவுக்கு) வெள்ளை மாளிகையில் ஒரு மிக நல்ல நண்பர் இருக்கிறார். இங்குள்ள அனைவரும் இந்தியாவை நேசிக்கிறார்கள், மேலும் அவர்கள் பிரதமர் மோடியை மிகவும் மதிக்கிறார்கள்" என்று ட்ரம்ப் கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks