சமையலும் காய்கறிகளும்

காய்கறிகள் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தக்காளி மற்றும் வெங்காயம் தான். எனவே அசைவ உணவாக இருந்தாலும் சரி, சைவ உணவாக இருந்தாலும் சரி கண்டிப்பாக தக்காளி வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது. அந்த வகையில் காய்கறி சந்தையில் எந்த காய்கறிகளை மக்கள் அதிகளவு வாங்குகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்குவார்கள். அதிலும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்தால் அவ்வளவு தான். இல்லத்தரசிகளின் நிலை பரிதாபமாகும்.

தக்காளி, வெங்காயம் விலை

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 75 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் 5 கிலோ 100 ரூபாய்க்கு என வாங்கி சென்ற இடத்தில் ஒரு கிலோ வாங்குவதற்கே திணறும் நிலை உருவானது. இதே போல தக்காளிக்கு போட்டியாக வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்களின் மாத பட்ஜெட்டை பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. எனவே எப்போது விலை குறையும் என காத்திருந்த நிலையில், திடீரென தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது குறைந்து இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

குறைந்தது தக்காளி, வெங்காயம் விலை

அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், தக்காளியின் தரத்தை பொறுத்து 4 கிலோ முதல் 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது நல்ல தரமான தக்காளி ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு வெங்காயம் வரத்தால் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு 5 கிலோ வெங்க்காயமானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் இது தான் நல்ல சான்ஸ் என பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.

கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம்

சென்னை கோயம்பேட்டில் பீட்ரூட் கிலோ 40 ரூபாய், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய், முருங்கைக்காய் கிலோ 150 ரூபாய், வெண்டைக்காய் 40 ரூபாய், பீன்ஸ் ஒரு கிலோ 150 ரூபாய்,
அவரைக்காய் 70 ரூபாய், உருளைக்கிழங்கு 20 முதல் 25 ரூபாய், பச்சை மிளகாய் 40 ரூபாய், பாகற்காய் 50 ரூபாய், சௌசௌ 50 ரூபாய், சின்ன வெங்காயம் 50 ரூபாய், இஞ்சி 150 ரூபாய், சின்ன வெங்காயம் 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: Read Full Article