திருப்பத்தூர்: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடாக இரண்டாம் விற்பனை செய்து வரும் டிரேடர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் திருப்பத்தூர் டிப்பர் லாரி உரிமையாளர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரி உரிமையாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ராஜாமணி, “திருப்பத்தூர் மாவட்டம் ராஜமங்கலம் அடுத்த பசிலி குட்டை பகுதியில் கிரேஸ் டிரேடர்ஸ் என்ற பெயரில் கனிம சேமிப்பு கிடங்கிற்கு அனுமதி பெற்றுக்கொண்டு, உரிமையாளர் தனக்கு சொந்தமான கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இயங்கி வரும் கிரேஸ் ப்ளூ மெட்டல்ஸ் கிரசரில் இருந்து கனிமங்களை தனது சொந்தமான லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிக்கொண்டும் அதற்கு ரசீது பெறாமலும், அதே போல ஒரு லாரிக்கு மட்டும் ரசீது போட்டு அதை வைத்து மூன்று லோடுக்கு வரை கனிம வளங்களை எடுத்து வந்து பசிக்குட்டை பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருப்பு வைத்து முறைகேடக இரண்டாம் விற்பனை செய்து அரசுக்கு பெறும் வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு அதற்கு உண்டான ஜிஎஸ்டி பில், ட்ரான்ஸ்சீட் பாஸ், எதுவும் கொடுக்காமல் டெலிவரி சலான் மட்டுமே கொடுப்பதால் காவல்துறையினர் மற்றும் கனிம வளத்துறையினர் நடுவழியில் லாரியை நிறுத்தி வழக்கு பதிவு செய்து ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைக்கும் நிலைமை ஏற்படுகிறது.

லாரி உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு எந்த ஒரு அனுமதிச்சீட்டும் கொடுக்காமல் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர்களிடம் மாமுல் பெற்றுக் கொண்டு காவல்துறையினரும், கனிம வளத்துறையினரும், வருவாய் துறையினரும் செயல்படுகின்றனர். எனவே இது போல மோசடி செய்யும் கிரேஸ் டிரேடர்ஸ் மற்றும் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Source: Read Full Article