உயிரியல் பூங்கா உங்க அப்பன் வீட்டு சொத்தா? .. தத்தி முதல்வர் விஜய்.. சரமாரியாக திமுக விமர்சனம்!

உயிரியல் பூங்கா உங்க அப்பன் வீட்டு சொத்தா? .. தத்தி முதல்வர் விஜய்.. சரமாரியாக திமுக விமர்சனம்!
News Image

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் செயல்படும் 3 உயிரியல் பூங்காங்களில் பொதுமக்கள் 2 நாட்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புக்கு திமுக ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று முதல்முறையாக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் அவரது பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ம் தேதி ரசிகர்களாலும், தவெக தொண்டர்களாலும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்பெஷலாக முதலமைச்சராக அவர் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், இரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

உயிரியல் பூங்காக்களில் இலவச அனுமதி

இதுதொடர்பாக அவர் கூறுகையில் , “முதலமைச்சர் விஜய் ஜூன் 22ம் தேதி தனது 52வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் வனத்துறை சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் முதல்வர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ஜூன் 21 மற்றும் ஜூன் 22ம் தேதி தமிழ்நாட்டிலுள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி சிறு உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பட்டியிலுள்ள வன உயிரியல் பூங்கா ஆகிய உயிரியல் பூங்காக்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கான அனுமதி சீட்டுகளை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான செலவுத்தொகையான ரூ.70 லட்சம் எங்கள் குடும்ப அறக்கட்டளையாக செயல்படும் வாழ் முனி நாயக்கர் அறக்கட்டளை மூலம் செலுத்தப்படும்” என அறிவித்தார். இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திமுக சரமாரியாக கண்டித்துள்ளது.

Also Read: வண்டலூர் உள்ளிட்ட 3 பூங்காவிற்கு 2 நாட்கள் கட்டணம் இல்லை - அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்!

தத்தி முதலமைச்சர் விஜய்

இதுகுறித்து திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், “உயிரியல் பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அவர்களே?... நேற்று 'வெள்ளை அறிக்கை' விட்டு கஜானாவில் காசில்லை என்று கதறிய நீங்கள், இன்று 'இன்ஸ்டா அரசன்' விஜய்யின் பிறந்தநாளுக்காக வண்டலூர் உள்ளிட்ட பூங்காக்களுக்கு 2 நாட்கள் இலவச அனுமதி எனப் பல்லிளிப்பது ஏன்?.. இந்த வருவாய் இழப்பை யார் ஈடுகட்டுவது?

வாயில்லா ஜீவன்களின் உணவுக்கும், ஊழியர்கள் சம்பளத்துக்கும் யார் பொறுப்பு?... முதல்வருக்குப் பிறந்தநாள் என்றால் உங்கள் கட்சி நிதியில காக்கா, அணிலுக்கு கேக் வெட்டி ஊட்டிவிடுங்கள். அதைவிட்டு மக்கள் வரிப்பணத்தில் கைவைக்க உங்களுக்கு என்ன தைரியம்?.. இந்த 'தத்தி' முதலமைச்சருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற துணிச்சலில் தான் அமைச்சர்களும், 'Shadow CM'ம் சேர்ந்து தமிழ்நாட்டை இப்படிச் சூறையாடுகிறீர்களா?” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரஞ்சித்குமார் 2 நாட்களுக்கான செலவை நாங்கள் ஏற்கிறோம் என தெளிவாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ள நிலையில் தரக்குறைவான வார்த்தைகளை திமுக ஐடி விங் பயன்படுத்துவதற்கு தவெகவினர் கொந்தளித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks