தமிழகத்தில் கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் தான் தென் மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கேரளா மாநில எல்லையில் உள்ள பல தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தென், டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் இடி,மின்னலோடு மழையானது பெய்து வருகிறது.

தமிழகத்தில் மழை

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் சுற்றுவட்டாரங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே இடி மழை பதிவாகி வருகிறது.மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இடி,மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, இளையாங்குடி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டாரங்களிலு. தேனி, தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

அடுத்த 2 மணி நேரம் டார்கெட்

வரக்கூடிய 2 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் மாவட்டத்தில் ஆங்காங்கே இடி,மின்னலுடன் கூடிய மழை பதிவாகும் என தெரிவித்துள்ளார். மேலும் மழைக்கு முன்னதாக தரைக்காற்று பலமாக வீசும், மழையின் போது இடி,மின்னல் தீவிரமாக இருக்கும். மாவட்டம் முழுதும் மழை பெய்யாது. பல இடங்களை ஒதுக்கினாலும் பெய்யும் இடத்தில் வலுவாக பெய்யும் என டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article