கடந்த திமுக ஆட்சியில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிக்கேட் என்ற தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புக் கட்ட தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் குறியீடு பெற்று பாதுகாக்கப்பட்ட நிலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு கட்டடம் கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்ததற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

குரல் கொடுத்த சவுக்கு சங்கர்

குறிப்பாக, இது குறித்து முதன்முதலாக பேசி, இந்த விவகாரத்தை பொதுவெளிக்கு கொண்டுவந்தவர்கள் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் அறப்போர் இயக்கமும்தான். இதனையடுத்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு என பல சூழலியல் மற்றும் சமூக அமைப்புகள் இந்த அனுமதிக்கு எதிராக குரல் கொடுத்தன. ஆனால், அந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி என்பது கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்படவில்லை.

Big News: Environmental Clearance cancelled for Rs 2000 Crore Brigade Morgan Heights given within Pallikaranai Ramsar Marsh

Brigade Heights - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
பாதுகாக்கப்பட்ட பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன்… pic.twitter.com/fhBwieRmPs

— Arappor Iyakkam (@Arappor) June 18, 2026

முதல்வர் விஜய்க்குக் கோரிக்கை வைத்த சவுக்கு சங்கர், அறப்போர் இயக்கம்

இந்நிலையில், தவெக அரசு ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த ஆட்சியில் விதிகளை மீறி கொடுக்கப்பட்ட பல்வேறு அனுமதிகள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், ராம்சார் அமைப்பின் பாதுகாக்கப்பட்ட இடமாக அங்கீகாரம் செய்யப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்ட பிரிகேட் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர், அறப்போர் இயக்கம் ஆகியோர் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் கோரிக்கை வைத்துவந்தனர்

Excellent decision @CMOTamilnadu. Excellent. And also please order a probe as to how permission was given. Lot of skeletons will come out. Former CS will have a lot of answering to do. https://t.co/leONc34oBB

— Savukku Shankar (@SavukkuOfficial) June 18, 2026

அனுமதி ரத்து – முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

இதனையடுத்து, ராம்சார் நிலப்பகுதியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு. பிரிக்கேட் கட்டுமான நிறுவனத்திற்கு கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை அதிரடியாக ரத்து செய்து தமிழக அரசின் தன்னாட்சி பெற்ற சுற்றுச்சூழல் தாக்க அமைப்பான SEIAA அமைப்பு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் முடிவு மிக முக்கியமானதாக பார்க்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் அனுமதி ரத்தை தொடர்ந்து சி.எம்.டி.ஏ அனுமதியும் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்

Source: Read Full Article