USA - Iran Deal: தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை

USA - Iran Deal: தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
News Image

USA - Iran Peace Deal: அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையெழுத்தான நிலையில், நாளை முறைப்படி சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம்:

அமெரிக்கா - ஈரான் இடையே 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையெழுத்தாகியுள்ளது. நாளை முறைப்படி சுவிட்சர்லாந்தில் இருநாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் நேரடியாக கையெத்தாக உள்ளன. இந்த அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 14 அம்சங்களின் விவரங்களை அமெரிக்கா தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய ஒப்பந்தம் மூலம் யாருக்கு என்ன லாபம்? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தற்போது கையெழுத்தவாது இடைக்கால ஒப்பந்தம் மட்டுமே எனவும், அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி உடன்படிக்கை எட்டப்படும் என்றும் அமெரிக்கா தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தின் 14 அம்சங்கள் என்ன?

அமெரிக்கா, ஈரான் மற்றும் போரில் ஈடுபட்டுள்ள அவற்றின் கூட்டாளிகள், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகியவை ஒன்றின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்றொன்று மதிக்கவும், ஒன்றின் உள் விவகாரங்களில் மற்றொன்று தலையிடாமல் இருக்கவும் உறுதியளிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஈரான் பரஸ்பர ஒப்புதலுடன் நீட்டிக்கப்படக்கூடிய வகையில், அதிகபட்சம் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உறுதியளிக்கின்றன

ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையையும், எந்தவொரு இடையூறுகளையும் அல்லது தடைகளையும் அமெரிக்க நீக்கத் தொடங்கும். மேலும் 30 நாட்களுக்குள் கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரும்

ஈரான் அரசானது பாரசீக வளைகுடாவிலிருந்து ஓமான் கடலுக்கும், ஓமான் கடலிலிருந்து பாரசீக வளைகுடாவுக்கும் வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு, 60 நாட்களுக்கு மட்டும் கட்டணமின்றி, தனது சிறந்த முயற்சிகளைப் பயன்படுத்தி ஏற்பாடுகளைச் செய்யும்.

ஈரானின் புனரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, குறைந்தபட்சம் 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு திட்டவட்டமான, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தை உருவாக்க, அமெரிக்கா தனது பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து உறுதியளிக்கிறது

ஈரானுக்கு எதிரான அனைத்து வகையான தடைகளையும், அதாவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள், சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர் குழுத் தீர்மானங்கள் மற்றும் அனைத்து ஒருதலைப்பட்சமான, முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகள் உட்பட அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக அமெரிக்கா உறுதியளிக்கிறது

அணு ஆயுதங்களைக் கொள்முதல் செய்யவோ அல்லது உருவாக்கவோ மாட்டோம் என்பதை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையாள்வது குறித்துத் தீர்வு காணவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது

இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, அமெரிக்கா மற்றும் ஈரான் அரசுகள் போர்முனையில் தற்போதைய நிலையை அப்படியே பராமரிக்க ஒப்புக்கொள்கின்றன.

ஈரானிய கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அதன் வழிப்பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், வங்கிப் பரிவர்த்தனைகள், காப்பீடுகள், போக்குவரத்து போன்றவை உட்பட அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் அமெரிக்க கருவூலத் துறை விலக்குகளை வழங்கியுள்ளது

ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், ஈரானின் முடக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நிதிகள் மற்றும் சொத்துக்களை முழுமையாகப் பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது

ஒப்பந்தத்தின் செயலாக்கத்தையும், இறுதி ஒப்பந்தத்தின் எதிர்கால இணக்கத்தையும் கண்காணிப்பதற்காக ஒரு நிர்வாக அமைபு நிறுவப்படும்

ஒப்பந்தத்தின் 1, 4, 5, 10 மற்றும் 11 ஆகிய அம்சங்களின் அமலாக்கம் தொடங்குவதற்கும், இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதற்கும் உட்பட்டு, இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மற்ற பத்திகள் குறித்து மட்டுமே தொடங்கும்

இறுதி ஒப்பந்தம் ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் ஒன்றின் மூலம் அங்கீகரிக்கப்படும்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மேற்குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான அம்சங்கள் செயல்பாட்டிற்கு வருவதற்கு, 60 நாட்களுக்குள் இறுதி உடன்படிக்கை எட்டப்பட வேண்டியது அவசியம் எனவும் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks