புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்தநாள் விழா...!

புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்தநாள் விழா...!

சேலம்:

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் மற்றும் ஜெயலலிதா விசுவாசிகளால் கொண்டாடப்பட்டு ஏழை-எளிய பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 60 அடி உயர ராட்சத கம்பத்தில் அதிமுக கொடியை தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஏற்றினார் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வரதராஜ் சட்டமன்ற உறுப்பினர் ராஜா முத்து மெடிக்கல் ராஜா அருண் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல, சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள அம்மா மணிமண்டபத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வார்டு கவுன்சிலர்கள் என ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks