தமிழக உள் மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை..!

தமிழக உள் மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை..!

தமிழ்நாடு:

தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாளை (07.02.2022) முதல் 10.02.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks