சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டில் கல்லூரி மாணவி நதியா போட்டியிடுகிறார். அயோத்தியபட்டினம் அருகே தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பயின்று வரும் அவர், நேற்று தனது மனுவை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலில் போட்டியிடுவதாக பேசினார்.
கல்லூரி மாணவி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

in
அரசியல்