நீட் விலக்கு மசோதா பற்றிய கவர்னரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

நீட் விலக்கு மசோதா பற்றிய கவர்னரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானது -அமைச்சர்
மா.சுப்பிரமணியன்..!

சென்னை

நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசும்போது கூறியதாவது:-
தனிப்பட்ட முறையில் கவர்னர் பற்றி கண்டிப்பாக பேச கூடாது; அதை நான் அனுமதிக்க மாட்டேன்.
ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கை காமாலைக் கண்ணுடன் உள்ளது. இது யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என கவர்னரின்  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:-
நீட் தேர்வை அறிமுக காலத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. 142 நாட்களுக்கு பிறகு சில காரணங்களை சுட்டிக் காட்டி சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு ஆளுநர் மசோதாவை அனுப்பி உள்ளார்.
அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர், குடியரசு தலைவருக்குதான் மசோதாவை அனுப்பி இருக்க வேண்டும். சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது சரியல்ல.
குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தன்னிச்சையாக ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது சரியான முடிவல்ல. பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்து உரிய ஆய்வுக்கு பிறகே நீர் விலக்கு கோரலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்தது.
ஆளுநரின் கருத்த உயர்மட்டக்குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளது. நீட் விலக்கு மசோதா பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானது.
பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு நீட் தேர்வால் மருத்துவ படிப்பு என்பதே எட்டாக்கனியாக மாறியுள்ளது. வசதி படைத்தவர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீட் தேர்வை எழுதுகிறார்கள்.
பழங்குடியின மக்கள் போன்ற நலிவுற்ற பிரிவினர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பாமல், நீதிபதி குழு அறிக்கை பற்றி தனது கருத்தை ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உரிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் குறைகூடுவது சரியல்ல.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கதல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஒரு சட்டமன்றம் சட்டமே இயற்றக்கூடாது என்று கூறுவது ஏற்புடையதல்ல இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks