ARRS Multiplex : சேலத்தில் திரையரங்கை சூறையாடிய அஜித் ரசிகர்கள்....!

ARRS Multiplex : சேலத்தில் திரையரங்கை சூறையாடிய அஜித் ரசிகர்கள்....!

சேலம்:

சேலம் மாவட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ்(ARRS) மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஐந்து திரைகளிலும் வலிமை திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அஜித் ரசிகர்களுக்கு வசதியாக சிறப்பு காட்சி காலை 4 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைப்படம் ஒளிபரப்பு செய்ய காலதாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் திரையரங்கில் இருந்த கண்ணாடிகள் மற்றும் இரும்பு ஷட்டரை உடைத்து எறிந்துவிட்டு திரை அரங்கினுள் சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அரை மணி நேரம் தாமதமாக படம் திரையிடப்பட்டது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks