சேலம்:
அருந்ததியர் மக்கள் மீது சாதி வெறி தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர் மற்றும் பாமக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ….

அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அண்ணா அறிவாலயம் மற்றும் முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் பேட்டி….
திருவண்ணாமலை மாவட்டம் வீரளுர் பகுதியில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தினரின் பிணத்தை பொதுப் பாதையில் எடுத்துச் சென்றதற்காக அருந்ததியர் மக்கள் மீது திமுக பிரமுகர் மற்றும் பாமக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தி, அருந்ததியர் மக்கள் வீடுகளில் புகுந்து பணம் நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்.

இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அருந்ததியர் மக்கள் மீது சாதி வெறி தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர் மற்றும் பாமக நிர்வாகிகள் மீது எஸ்சி எஸ்டி சட்டத்தின்கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும்,
அருந்ததியர் மக்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் பொதுச் செயலாளர் பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாயத்தினர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் பொதுச்செயலாளர் கூறுகையில் தமிழக முதல்வர் உடனடியாக இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக அவரின் கட்சியை சார்ந்த ஒன்றியச் செயலாளர் மற்றும் பாமக நிர்வாகிகள் இந்த தாக்குதலை நடத்தி வீடுகளை சூறையாடினர். வீட்டில் இருந்த பணம் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர் இது குறித்து காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் வாங்க மறுக்கிறார்கள், எனவே தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாதி வெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்..
தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அண்ணா அறிவாலயம் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இல்லத்தின் முன்பு மாபெரும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என கூறினார் .