சேலம்:
சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், தொடர்ச்சியாக இன்று சேலம் கோட்டை மைதானத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு தில்லுமுல்லு செய்து உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை கண்டு பயந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கை போட்டு வருகிறது, அதிமுக ஒரு அசைக்க முடியாத சக்தி, அதிமுகவின் இரு கண்களாக எடப்பாடி பழனிசாமி அழகிய நானும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் இருந்து அதிமுகவே இரும்பு கரம் கொண்டு காத்து வருகிறோம். அதிமுக மீது பொய் வழக்குப் போடுவதை திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் நிச்சயமாக அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும் என எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவில் மத்தியில் பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவுக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.