Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்..!

Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்..!

சப்தமில்லாமல் நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மரணத்தின் வாயிலுக்கு கொண்டு செல்லும் நோய்களில் புற்று நோயும் ஒன்று. உடலுக்கு அடிப்படையாக உள்ள செல்கள் என்னும்  உயிரணுக்களை பாதிக்கும் நோயைத் தான் புற்றுநோய் என்கிறோம்.  இந்த நோய் வந்துவிட்டாலே இறப்பு உறுதி தான் என்ற நிலை மாறி, அதற்கான பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், இந்த பெயரை கேட்டாலே மக்களின் மனதில் தோன்றும்  பயமும் பாதிப்பும் அதிகம் தான் என்றால் மிகையில்லை.

புற்று நோய் என்னும் கொடிய அரக்கனை தவிர்க்க மஞ்சளை உணவில் சேர்ப்பது நல்லது. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மஞ்சளின் திறனை உலகெங்கிலும் உள்ள பல விஞ்ஞானிகளால் சில ஆண்டுகளுக்கு முன்பே அங்கீகரிக்கத்துள்ளனர். உலகில் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக புற்றுநோய் கருதப்படுகிறது.

மஞ்சளில் இயற்கையாகவே காணப்படும் குர்குமின் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. பெரும்பாலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சைக்குப் பிறகும் புற்றுநோய் மீண்டும் வருகிவதைக் காணலாம். ஏனெனில் உடலில் மீதமுள்ள சில புற்றுநோய் செல்கள் மீண்டும் நோயை உண்டாக்குகிறது. இதை தவிர்க்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குர்குமின் உள்ள மஞ்சளை ஸ்கின் பேக்காக பாதிக்கப்பட்ட உடலின் பாகங்களில் தடவலாம்.

சருமத்தில் தடவுவதன் மூலம் குர்குமின் உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் புற்றுநோய் செல்களை அகற்றும், ஆனால் இது ஆரோக்கியமான செல்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் உடலுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.

தினசரி உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்வதும் புற்று நோய் வராமல் தடுப்பதில் நல்ல பலன் தரும். உலகம் முழுவதும் மட்டுமல்ல, இந்தியாவிலும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே, தொடர்ந்து மஞ்சளை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks