திமுகவினரின் விரோதியாம்...! பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்... சிறிய பட்டியல்...!

திமுகவினரின் விரோதியாம்...! பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்... சிறிய பட்டியல்...!

சேலம்:

சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய மாநர செயலாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் திமுக கட்சியின் விரோதி. இவர் கட்சித் தொண்டர்களுக்கு செய்த விரோத செயல்களின் சிறிய பட்டியலை மட்டும் இப்போது பார்ப்போம்…

சென்னை சட்டக் கல்லூரியில் மாணவராக ராஜேந்திரன் படித்துக் கொண்டிருந்த போது கருப்பு, சிகப்பு கொடியை ஏந்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்டார்.

முறையாக சட்டம் படித்து வழக்கறிஞர் பணிக்கு வந்தாலும், தனது உயிர்மூச்சாக நினைக்கும் தலைவர் கலைஞர்,தளபதி ஸ்டாலினின் ஈர்ப்பால் கட்சியிப் பணிகளில் அதிகம் உழைக்கக் தொடங்கினார் ராஜேந்திரன்.

அறிஞர் அண்ணாவின் கரங்களால் மோதிரம் பெற்றவர் கலைஞர்.இதே கலைஞரின் திருக்கரங்களால் மோதிரம் அணிவிக்கப்பட்ட பெரும் பேறு பெற்றவர் ராஜேந்திரன்.

அன்று முதல் இன்றுவரை கலைஞர், தளபதி உள்ளிட்ட திமுக மற்றும் பொதுமக்களிடம் நல்ல மதிப்பை பெற்று வருபவர்.தற்போது இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

தொகுதி மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்று ராஜேந்திரனுக்கு தெரிந்தால் போதும்,அவராகவே ஓடிச்சென்று உதவிகளை சத்தமின்றி, எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் செய்வார்.

சேலம் மாவட்டத்தில் திமுகவை அழிப்பதற்கு எவ்வளவோ முயற்சிகளும்,சதியாலோசனைகளும் தொடர்ந்து நடந்து வந்தது.அத்தனையையும் கட்சியின் உடன்பிறப்புகளின் துணையுடன் ராஜேந்திரன் தூள் தூளாக உடைத்தெறிந்தார்.

ராஜேந்திரன் மீது யார் யாரோ வீண்பழிகள் சுமத்தும் போதெல்லாம் ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’என்கின்ற அண்ணாவின் தாரக மந்திரத்துடன், அனைத்தையும் தாங்கிக் கொண்டு, முகத்தில் புன்னகையுடன் வலம் வந்தார்.

ராஜேந்திரனின் இதயம் ஒருநாள் தாக்குப் பிடிக்க முடியாமல்,அடைத்து கொண்டது.இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தளபதியின் அன்பாலும்,உடன்பிறப்புகளின் பாசத்தாலும் ராஜேந்திரன் இன்றும் எப்போதும் போல் கடுமையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

காய்த்த மரம்தான் கல்லடிப்படும் என்பதற்கு ராஜேந்திரன் ஒரு எடுத்துக்காட்டு.இவர் மீது என்னென்ன வீண்பழிகளை சுமத்தினார்களோ, அத்தனை பேரின் முகத்திரையும் நார் நாராக கிழிந்து, அந்தப் பழியின் புதை குழிக்குள் அவர்களாகவே சிக்கிக் கொண்டார்கள்.

இதுதான் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் திமுக கட்சிக்கு செய்த விரோத பட்டியலின் ஒரு சிறிய தொகுப்பு.திமுக இயக்கத்தின் வராலாற்றில்,இதுவரை எந்த பித்தலாட்டமும், துரோகமும் வென்றதாக சரித்திரமே இல்லை…!

                                                                                                                                                           – சிட்டிபாபு

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks