சேலம்:
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட புற நோயாளிகளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு பணியாற்றும் 107 பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊக்கத்தொகை மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை. பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்,

இன்று அரசு மருத்துவமனையில் மூன்று மாத கால ஊக்கத் தொகையை வழங்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பயிற்சி மருத்துவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மருத்துவர்களின் இந்த தர்ணா போராட்டம் அரசு மருத்துவமனை வளாகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
