ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருவபவர் சக்திவேல். அவருடைய மனைவி ராணி.
இந்நிலையில், டாக்டர் சக்திவேல் மனைவி ராணி மற்றும் குடும்பத்தினர் நேற்று நள்ளிரவு தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் கத்தியை காட்டி டாக்டர் சக்திவேல், மனைவி ராணி மற்றும் குடும்பத்தினர் என 4 பேரை கட்டிப்போட்டனர்.
இதனை தொடர்ந்து வீட்டின் பீரோவில் இருந்த 25 லட்ச ரூபாய் பணம், 275 பவுன் நகையை அந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது. மேலும், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டாக்டரின் காரையும் அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது.

இந்த கொள்ளை குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளை கும்பலா? அல்லது உள்ளூர் நபர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
in
க்ரைம்