TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?

TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
News Image

TNEB Hard Disks: திருடப்பட்ட ஹார்ட் டிஸ்கில் டெண்டர், நிலக்கரி கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளனவாம்.

திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள்..!

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக குறைந்தது 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டு இருக்கும் அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. அவற்றில் டெண்டர், கொள்முதல் மற்றும் பல்வேறு புகார்கள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான ரகசிய தகவல்கள் பல இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. கையிருப்பில் உள்ள பொருட்களை நிர்வகிக்கும் துறை வசம் இருக்கும், நிலக்கரி கொள்முதல் தொடர்பான தரவுகளை திருடுவதே இந்த நடவடிக்கையின் முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளதாம். காகிதம் அடிப்படையிலான நகல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தாலும், அனைத்து முக்கியமான மின் ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன.

திருட்டு சம்பவம் நடந்தது எப்போது?

கடந்த மே மாதம் 16-17 தேதி வார இறுதியில் குறைந்த ஊழியர்களே அலுவலகத்தி இருந்த நிலையில், இந்த திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் நிர்மல் குமார் அந்த அலுவகலத்திற்கு நேரில் சென்று தவறு செய்தது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்ட பிறகு இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து, கடந்த 20ம் தேதி வேறு பிரிவை சேர்ந்த ஊழியர்கள் தங்களது கணினிகளிலிருந்து திட்ட கோப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காணாமல் போனதை கண்டறிந்த பிறகு, இந்த ஒட்டுமொத்த திருட்டு சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து நடைபெற்ற ஆய்விலேயே ஒட்டுமொத்தமாக 18 ஹார்ட் டிஸ்குகள் திருடுபோனது கண்டறியப்பட்டுள்ளது.

புகாரளிக்க தயங்கும் அதிகாரிகள்:

இந்நிலையில், வெறும் 8 ஹார்ட் டிஸ்குகள் தொடர்பாக மட்டுமே இதுவரை முறைப்படி துறைரீதியாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாம்.  நிதித்துறை மற்றும் பல பிற பிரிவுகள், இந்தத் திருட்டு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரிடம் அல்லது ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவரிடம் தெரிவிக்கத் தயக்கம் காட்டுகின்றனராம். டிஸ்க்குகளையும் தரவுகளையும் பராமரிக்கும் பொறுப்புள்ள
எவரும் காவல்துறையிடம் புகார் அளிக்க இதுவரை முன்வரவில்லையாம்.

சிறப்புக் குழு விசாரணை

டெண்டர்கள், கொள்முதல்கள் மற்றும் நிர்வாகப் பணிகளைக் கையாளும் துறைகளின் அதிகாரிகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூத்த அதிகாரிகளிடம் புகார்களைச் சமர்ப்பித்துள்ளனராம்.  இந்தப் புகார்கள் ஆரம்பத்தில் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் ஆயுஷ் மணி திவாரி தலைமையிலான தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) ஊழல் தடுப்புப் பிரிவிடம் அனுப்பப்பட்டன. அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தின் நான்காவது, ஐந்தாவது. ஏழாவது மற்றும் பத்தாவது மாடிகளில் அமைந்துள்ள அலுவலகங்களிலிருந்து திருடப்பட்ட ஹார்ட் டிஸ்குகளை கண்டறிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை

சிசிடிவி கேமரா எங்கே?

திருட்டு சம்பவம் நடந்த பகுதிகளில் பெரும்பாலானவற்றில் இருந்த சிசிடிவி கேமராக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டுவிட்டன. கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகளுக்கு வழிவகுத்த பேரங்களை முடித்துத் தர வரும் இடைத்தரகர்கள் பற்றிய எந்தப் பதிவும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கண்காணிப்பு அதிகாரிகள் சிசிடிவி கேமரா கண்காணிப்பை மீண்டும் மீண்டும் பரிந்துரைத்தபோதிலும், அதன் செலவு மிகவும் அதிகம் என்ற அடிப்படையில் கண்காணிப்புப் பொறியாளர் (கட்டிடங்கள்) அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம்.

ஆவணங்களால் யாருக்கு சிக்கல்?

டான்ஜெட்கோ நிறுவனத்தில் டெண்டர் தொடர்பான முறைகேடுகள் குறித்து நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு மத்தியில் இந்தத் திருட்டும் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம். ஏலதாரர்களிடையே கூட்டுச் சதி மற்றும் உயர்த்தப்பட்ட விலை நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் கூடிய ரூ.397 கோடி மதிப்பிலான மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்க இயக்குநரகம் உள்ளிட்ட மத்திய அமைப்புகளும், 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வழங்கப்பட்ட மின்சாரத் துறை டெண்டர்கள் தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருகின்றன. மேற்குறிப்பிடப்பட்ட காலகட்டங்களில் செந்தில் பாலாஜி தான், இந்த இலாகா அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks