Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 05 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் உடுமலைப்பேட்டையில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை மாவட்டம்

காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி, செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

திண்டுக்கல் மாவட்டம்

ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடங்கும்.

வேலூர் மாவட்டம்

பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லேன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பலூர் மாவட்டம்

செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, தண்ணீர் பூஞ்சோலியார்க்ஸ், குணமங்கலம்.

புதுக்கோட்டை மாவட்டம்

கரம்பக்குடி, நெடுவாசல், ரெகுநாதபுரம், புனல்குளம், குளத்தூர் நாயக்கர்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

உடுமலைப்பேட்டை

உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டினம், பி.என்.பட்டணம்.

Also Read| அடுத்த 24 மணி நேரம் உஷார் - தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை - சென்னையின் நிலவரம் என்ன?

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Source: Read Full Article