தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடம்.. த்ரிஷாவுக்கு முதல் இடமா? - விஜயை விளாசிய நக்கீரன் கோபால்!

தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடம்.. த்ரிஷாவுக்கு முதல் இடமா? - விஜயை விளாசிய நக்கீரன் கோபால்!
News Image

விஜயிடம் சென்று தேர்தல் முடிந்து விட்டது. இப்போது நீங்கள் தான் முதலமைச்சர் என யாராவது சொல்லுங்கள் என்று பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நடந்த வாழ்த்தரங்கம் நிகழ்வில் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “எனக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது. மே 10ம் தேதி யார் புதிய ஆட்சி பொறுப்பேற்பதற்கு நேரம் குறித்தாரோ தெரியவில்லை. அன்றிலிருந்து கொலை, பாலியல் வன்கொடுமை என இன்று வரை நடந்துள்ளது. நேரம் குறித்த ஜோதிடரை தான் பாராட்ட வேண்டும். நான் இந்த நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியைப் பற்றி தான் பேச வந்துள்ளேன். ஆனால் போகிற போக்கில் சில விஷயங்களைப் பேசாமல் போய்விட்டால் ஏதாவது நினைத்து விடுவார்கள். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் பேசி முடிக்கும்போது நம்பிக்கையோடு இருங்க.. வெற்றி நிச்சயம் என சொல்லி தனது பேச்சை நிறைவு செய்தார்.

அவரிடம் யாராவது போய், தேர்தல் முடிஞ்சிடுச்சி.. நீங்க தான் முதல்வருனு  சொல்லுங்கள். ஒருவரும் அதை சொல்ல மாட்டேங்குகிறார்கள். விஜய் ஒவ்வொரு முறையும் ஆளுநரிடம் செல்லும்போது அவருடன் விஷ்ணு ரெட்டி, ஜனநாயகன் பட தயாரிப்பாளர் இருவரும் சென்றனர். இவர்கள் இருவருக்கும் ஆளுநரிடம் என்ன வேலை என யாரும் கேட்கவில்லை. திமுக தலைவர் 6 மாதம் விட்டு பிடிக்கலாம் என சொல்லியிருக்கிறார். ஆனால் நாங்கள் விட்டுப் பிடிப்பதாக இல்லை. எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.

முதல் வரிசை த்ரிஷாவுக்கும், 3வது வரிசையில் தமிழ்த்தாய் வாழ்த்தையும் வைத்ததைப் பார்த்து விட்டோம். உரிமையோடு போராடி வந்திருப்பவர்களுக்கு தான் அந்த அருமை தெரியும். நாம் நல்லது மட்டுமே பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. சில விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து விஜய் வந்ததை ரீல்ஸ் போடுகிறார்கள். இந்த நாடு எதை நோக்கி போகிறது.

Also Read: CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!

மேகதாது பிரச்னை பற்றி இங்கு பேசினார்கள். அப்படி என்றால் என்ன என்பது பற்றியே தவெக அரசுக்கு ஒருவர் சொல்லித்தர வேண்டிய சூழல் இருக்கிறது. அதனைப் பற்றி அங்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. இரும்பு பெண்மணியான இந்திரா காந்தியிடம் சண்டையிட்டு தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டுமென அதை உருவாக்கி விட்டு சென்று சந்தித்தவர் கருணாநிதி. இந்திரா காந்தி அதனை மறுக்கவே, தேசிய கொடி ஏற்றும் உரிமையாவது தர வேண்டும் என உரிமையை பெற்றார்.

ஆனால் இங்கு தான் முதலமைச்சராக இருப்பதை மறந்த ஒருவர் வரும் ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தில் கொடியேற்றுவார். அப்போது அந்த கொடியை தொடும்போது உருவாகும் அதிர்ச்சி கருணாநிதியால் உண்டானது. அவர் இல்லையென்றால் கோட் போட்டுக் கொண்டு எல்லாம் கொடியேற்ற முடியாது. ஒரு பிரதமரிடம் சென்று மாநிலத்திற்கான எந்த உரிமையை பெற வேண்டும் என்பதை தொடங்கி வைத்தவர் கருணாநிதி தான் என தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks