முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், சமீபத்தி அவர் சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வரிசையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். அது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஸ்ரீநாத்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற தனது ஆருயிர் நண்பரான ஸ்ரீநாத்தை, மீன்வளத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார் விஜய். இந்த நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் ஆகியோர், திருவான்மியூர் குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மீனவ மக்களின் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மீனவ மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் அமைச்சர் ஸ்ரீநாத் கேட்டறிந்தார். இந்நிலையில், அவரது அதிரடி ஆய்வுகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில், திருவான்மியூர் பகுதியில் உள்ள மீனவ மக்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் ஸ்ரீநாத்திடம், ‘கச்சத்தீவு மீட்பு’ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பலமுறை ‘நோ கமெண்ட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாடு மீனவர்களின் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படும் ‘கச்சத்தீவு’ பிரச்னை தொடர்பான கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கூறிய பதில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.

தொகுதி மாறி நன்றி தெரிவித்து மீண்டும் சர்ச்சை

இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் சர்ச்சையில் சிக்கி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் அமைச்சர் ஸ்ரீநாத். தன்னை வெற்றிபெற வைத்த தொகுதி மக்களக்கு நன்றி தெரிவிக்க நினைத்த அவர், நன்றி தெரிவித்ததென்னவோ பக்கத்து தொகுதி மக்களுக்குத் தான்.

ஆம், தான் வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிதானா என்று தெரியாமல், திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட புன்னைக்காயல் மீனவ மக்களுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் நன்றி தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்ரீநாத், திமுக வெற்றி பெற்ற தொகுதியில் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி நடத்திய அவர், எங்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்த உங்கள் ஊர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் என பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Source: Read Full Article