சட்ட விரோத வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை

சென்னை பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் பெரியமேடு சென்டிரல் ஸ்கொயர் பேருந்து நிறுத்தத்திலுள்ள லிப்ட் அருகே கண்காணித்து அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நபரை விசாரணை செய்துனர்.

அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் உடல் வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் , காவல் நிலையம் அழைத்துச் சென்று பெரியமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்த ஷேக் இம்ரான் ( வயது 34 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மொத்தம் 464 எண்ணிக்கைகள் கொண்ட உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் , சொந்த ஊரிலிருந்து மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஷேக் இம்ரான் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

அண்ணாசாலை ; சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை

சென்னை அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் ஒயிட்ஸ் ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யூ 5 வது கேட் அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களிடம் விசாரணை செய்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர்.

உடல் வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று அண்ணாசாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த செஞ்சு நவீன் ( வயது 25 ) , தஸ்தகீர் ( வயது 25 ) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 Nitrosun மாத்திரைகள், 80 Tydol மாத்திரைகள் என மொத்தம் 90 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source: Read Full Article