பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை பைக்கில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் !

பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை பைக்கில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் !
News Image

காவல்துறையின் பிரத்யேக உதவி எண்களான 1098, 181 போன்ற குழந்தைகளின் உதவிக்கான எண்கள் குறித்து பள்ளி நிர்வாகம் பள்ளி குழந்தைகளுக்கு தெரிவித்து வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - காவல்துறை.

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறப்பு மதுரை மாநகர காவல் துறையின் அறிவுரைகள் நாளை 04.06.2026 தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் புதிதாக மேல் வகுப்புகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பாக வாழ்த்துக்கள். நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் குழந்தைகளின் பெற்றோர்கள் அரசு மற்றும் தனியார் வாகனங்களில் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளி பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மிகாமல் பள்ளி குழந்தைகளை வாகனத்தில் ஏற்றி செல்ல பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனியார் வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும்

தனியார் வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான குழந்தைகளை ஏற்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் உரிய நேரத்தில் தங்கள் குழந்தைகள் பள்ளி சென்று வருவதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிக்கு குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வதையும் மிதமான வேகத்தில் செல்வதையும் சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடித்து செல்வதையும் இரண்டு குழந்தைகளுக்கு மிகாமல் அழைத்துச் செல்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

கவனம் தேவை

தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களோ அல்லது ஆட்டோவில் அழைத்துச் செல்லும் ஓட்டுனர்களோ பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது மது அருந்தி வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பள்ளி மாணவர்களை இருசக்கர வாகனத்தில் (சைக்கிள் தவிர பள்ளிக்கு அனுப்புவதை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது) பள்ளி ஆசிரியர்களும், நிர்வாகமும் குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை எனில் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது குழந்தை வர இயலாததற்கான காரணத்தை கண்டுபிடிக்க உதவும். பள்ளி மாணவ, மாணவிகளோ சரியான நேரத்திற்கு வீட்டிற்கு திரும்பி வரவில்லை எனில் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குழந்தை பள்ளியை விட்டு புறப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். பின் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து குழந்தையை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவல்நிலையத்தில் தகவல்

அனைத்து பள்ளிகளிலும் போதை பொருள் தடுப்பு மன்றம் (Anti 2/3 Club) செயல் பட்டு வருகிறது இது குறித்துமாணவர்களுக்கு-பெற்<wbr />றோர்களுக்கும் பள்ளி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகளிலோ அல்லது ஏதேனும் தனிநபரோ தடை செய்யப்பட்ட கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஏதேனும் விற்பனை செய்யும் பட்சத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்துறையின் பிரத்தியேக உதவி எண்களான 1098, 181 போன்ற குழந்தைகளின் உதவிக்கான எண்கள் குறித்து பள்ளி நிர்வாகம் பள்ளி குழந்தைகளுக்கு தெரிவித்து வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளிக்கு வரும் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதை பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உறுதி செய்ய வேண்டும். பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தால் அடுத்து வரும் பேருந்தில் குழந்தைகள் ஏறிச் செல்ல வேண்டும் என்று பெற்றோர்கள் தங்கள் பள்ளி குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் ஓடும் பேருந்தில் ஏறுவதோ இறங்குவதோ சாகசம் செய்வதோ கூடாது என பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் அறிவுறுத்த வேண்டும்.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாணவர்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு காலையிலும் மாலையிலும் பள்ளிக்கூட பகுதிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் போன்ற பகுதிகளில் அந்தந்த சரக காவல்துறையினர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்களை நியமித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணித்து வர காவல்துறையினருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு குற்றம் நடவாத மாநகரமாக திகழ்ந்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு மதுரை மாநகர காவல் துறை சார்பாக இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks