" முதல்வராகி விட்டீர்கள் Body Language மாற்ற வேண்டும் " விஜயை விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்

" முதல்வராகி விட்டீர்கள் Body Language மாற்ற வேண்டும் " விஜயை விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்
News Image

மத்திய அரசின் நலத்திட்ட சிறப்பு முகாம்

சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான சிறப்பு முகாமை தொடங்கி வைத்த பின் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ;

மூன்று நாட்கள் மயிலாப்பூர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முகாம் நடைபெற்று வருகிறது. கை கூப்பி நன்றி சொல்வதை விட அவர்களை கை தூக்கி விடலாம் என்று மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசி இந்த முகாம் நடத்துகிறோம். மயிலாப்பூர் தொகுதியில் வாக்களித்தவர்கள் , வாக்களிக்காதவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த முகாம் நடைபெறுகிறது

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு ;

சரியான நேரத்தில் பதிவு செய்தால் கேஸ் தட்டுப்பாடு இங்கே இல்லை. போர் சூழல் இருக்கும் பொழுது மற்ற நாடுகளில் 10% பெட்ரோல் , டீசல் விலை ஏறிவிட்டது. போர் பதட்டம் தீர்ந்தவுடன் பெட்ரோல் , டீசல் விலைக்கு தீர்வு காணப்படும்.

சிங்கப்பெண் திட்டம் - தெளிவு இல்லை

தமிழ் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு என்பது அச்சுறுத்தக் கூடிய வகையில் இருக்கிறது. இதனை இரும்பு கரம் கொண்டு டிஜிபி அடக்குவார் என நினைக்கிறேன். மேலும் முதலமைச்சர் அறிவித்த சிங்கப் பெண் படை எப்போது பணியாற்ற ஆரம்பிப்பார்கள் ? என்ன பண்ணி அவர்களுக்கு என்று எந்த தெளிவும் இல்லை

முதலமைச்சர் இல்லத்திற்கு எதிரே மின்சார தடைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். தலைமைச் செயலகம் வெளியே குடும்பத்துடன் தீ குளிக்கும் முயற்சி செய்து இருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த இந்த ஆட்சி எதிர்ப்போடு கிளம்பி இருக்கிறது. முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்

முன்னாள் முதல்வர் கலைஞர் படம் நீக்கம்

தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் நீக்கியதற்கு , எல்லா இடங்களிலும் முன்னாள் முதலமைச்சர்களின் படம் நீக்கப்பட்டு முதலமைச்சரின் படம் வைக்கப்பட்டிருக்கிறது.

நூலகத்தில் எல்லா அமைச்சர்களின் புகைப்படங்களும் இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் இந்த அரசு மரியாதை கொடுக்க வேண்டும். படங்களை எடுப்பது படங்களை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

Language மாற்ற வேண்டும்

முதலமைச்சரின் திருச்சி பேச்சு பேச்சாக தான் இருக்கிறது. அவரிடம் முதலமைச்சராகி விட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. அதிகாரத்திற்கு வந்த பிறகு , முதலமைச்சராக அவர் பணியாற்றுகிறாரா என்று தெரியவில்லை. முதலமைச்சராகி விட்டீர்கள் முதலமைச்சராக நடந்து கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

பிக்கப் ( pick up ) ஆகி விடுவார் என்று நினைக்கிறோம். முதலமைச்சரான பிறகு Language மாற்ற வேண்டும் , body Language மாற்ற வேண்டும்.

மும்மொழி கொள்கை - எந்த அழுத்தமும் இல்லை

பி.எம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். மும்மொழி என்பது மாநிலத்திற்கு எதிரானது என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் இது மாநிலத்திற்கு எதிரானது அல்ல என்று தெரிவித்திருக்கிறது. மாணவர்கள் விருப்பப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறோம். இதில் அழுத்தம் இல்லை.

அண்ணாமலை புதிய கட்சி ?

பாஜக தொண்டர்களை நான் வணங்குவதற்கு காரணம் எவ்வளவு தோல்விக்கு பிறகும் என் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என் பகுதியில் என் கட்சியை வளர்த்தே ஆவேன் என்று என்னிடம் வந்து பேசுவது பாஜகவின் தொண்டர்கள் நிலையாக இருக்கிறார்கள்.

இந்தப் பின்னடைவு கொஞ்சம் பாதிக்கலாம் ஆனால் எந்த விதத்திலும் கட்சியை அது பாதிக்காது. கட்சியில் உள்ள தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள் கட்சியை வளர்ப்பதற்கு உறுதியாக இருக்கிறார்கள். கொள்கை பிடிப்பில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை தெளிவாக சொல்கிறோம். நிச்சயமாக கட்சி மீண்டும் எழும்.

இறுதியாக , அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு தமிழிசை பதில் சொல்லாமல் புறக்கணித்தார்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks