TN DGP Mahesh Kumar Aggarwal: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று எல்லை பாதுகாப்பு படை சிறப்பு டிஜிபி பொறுப்பிலிருந்து மகேஷ் குமார் அகர்வாலை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய அரசு உத்தரவு:

தமிழ்நாடு சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக நியமிப்பதற்கான 3 பேர் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி தேர்வுக்குழு அங்கீகரித்ததை தொடர்ந்து, மகேஷ் குமார் அகர்வால் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மத்திய அரசின் கீழ் எல்லை பாதுகாப்பு படை சிறப்பு டிஜிபி பொறுப்பிலிருந்து மகேஷ் குமார் அகர்வாலை விடுவிக்க வேண்டும் என கடந்த 29ம் தேதி கடிதம் எழுதப்பட்டது. அதன்பேரில், வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், “எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) சிறப்பு டி.ஜி.யான மகேஷ் குமார் அகர்வால், ஐ.பி.எஸ் (தமிழ்நாடு:1994 பேட்வ்) அவர்களை உடனடியாக அவரது சொந்த பணிப்பிரிவு மாநிலத்திற்கு திருப்பி அனுப்புவதற்கான உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஓராண்டாக பொறுப்பு டிஜிபிக்களால் கண்காணிக்கப்பட்டு வந்த சட்ட ஒழுங்கு, இன்று முதல் நிலையான அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் செல்ல உள்ளது.

https://tamil.abplive.com/web-stories/health/dry-ginger-powder-10-health-benefits-of-a-pinch-of-dry-ginger-powder-details-in-tamil-262417

ஓராண்டிற்குப் பிறகு டிஜிபி நியமனம்:

தமிழ்நாட்டின் சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக இருந்த சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடன் முடிவுற்றது. அதன் பிறகு சுமார் ஓராண்டாகியும் காவல்துறையின் முக்கிய பதவிக்கு நிலையான ஒருவர் தேர்வு செய்யப்படாமல், பொறுப்பு டிஜிபிக்களே அந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர். கடைசியாக தேர்தல் நேரத்தில் சந்தீப் ராய் ராத்தோரை மாநிலத்தின் டிஜிபி ஆக தேர்தல் ஆணையம் நியமித்தது. அதைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அனுப்பிய, 3 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை யுபிஎஸ்சி தேர்வாணையம் அங்கீகரித்தது. அதன்படி, 1994ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால், மாநிலத்தின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, இன்று பதவியேற்க உள்ள மகேஷ் குமார் அகர்வால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பினை வகிக்க உள்ளார்.

சட்ட-ஒழுங்கு சீராகுமா?

தமிழ்நாடு அரசியலில் சட்ட-ஒழுங்கு மிகப்பெரிய விவாதமாக உருவெடுத்துள்ள சூழலில், மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ளார். தமிழ்நாட்டில் போதைப் பொருள் தீவிரமாக பரவி உள்ளதாகவும் அதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான அநேக குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ள புதிய டிஜிபி, போதைபொருள் நடமாட்டத்தை குறைத்து அதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களையும் கட்டுக்கொள் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது சிறப்பாக பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article