ஏபிபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 மாநாட்டில் பேசிய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட பதற்றங்கள் காரகமாண, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் இந்திய கப்பல்களின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்ததாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். மேலும், பாதுகாப்பாக செல்வதற்கு இந்திய கப்பல்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது என்று வெளியான செய்திகளையும் அவர் நிராகரித்துள்ளார். அத்தகைய கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் கூறியுள்ளார். உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது, இந்த பிராந்திய நெருக்கடி ஏற்படுத்தும் தாக்கம் குறித்த தொடர் விவாதங்களுக்கு மத்தியில், அவரது இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

“ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்தில் கடும் சரிவு“

மோதலால் ஏற்பட்ட சீர்குலைவின் அளவை சுட்டிக்காட்டி, சண்டை தீவிரமடைவதற்கு முன்பு தினமும் சுமார் 136 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்தன என்று சோனோவால் குறிப்பிட்டார்.

இருப்பினும், பாதுகாப்புச் சூழல், கடல்வழிப் போக்குவரத்து முறைகளை வெகுவாக மாற்றியது என்றும் தெரிவித்த அமைச்சரின் கூற்றுப்படி, நெருக்கடிக் காலங்களில் இந்தியக் கப்பல்கள் எவையும் அந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாத காலகட்டங்களும் இருந்ததாக குறிப்பிட்டார். மேலும், சில நாட்களில் அந்த எண்ணிக்கை ஒரே ஒரு கப்பலாகக் குறைந்தது என்றும் சுட்டிக் காட்டினார்.

“ஹார்முஸ் வழியாக பயணிக்க ஒரு பைசா கூட செலுத்தப்படவில்லை“

ஏபிபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 மாநாட்டில், உலகின் மிகவும் பரபரப்பான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றான, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்வதற்கு இந்தியக் கப்பல்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என்று சோனோவால் திட்டவட்டமாகக் கூறினார்.

அமைச்சரின் கூற்றுப்படி, இந்திய கப்பல் நிறுவனங்களோ அல்லது கப்பல் இயக்குநர்களோ நீர்வழிப்பாதை வழியாகச் செல்வதை உறுதி செய்வதற்காக பணம் கொடுத்ததாகக் கூறும் அறிக்கைகளுக்கு உண்மையில் எந்த ஆதாரமும் இல்லை. அவரது இந்தக் கூற்று, இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பான பயணத்திற்காக ரொக்கமாகவோ அல்லது கிரிப்டோகரன்சி மூலமாகவோ பணம் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, இந்திய அதிகாரிகள் முன்னதாக வெளியிட்ட விளக்கங்களுடன் ஒத்துப்போகிறது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் முன்னதாக இதுபோன்ற அறிக்கைகளை "போலிச் செய்திகள்" என்று குறிப்பிட்டிருந்ததுடன், கப்பல் உரிமையாளர்களும் எந்த பணமும் செலுத்தியதை மறுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

நெருக்கடிக்கு உள்ளாகும் இந்தியா.?

அமைச்சரின் தகவல்களை வைத்துப் போர்க்கும்போது, இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெயின் அளவு எவ்வளவு குறைந்திருக்கும் என்பது தெளிவாகிறது. இதன் காரணமாகவே தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, எல்பிஜி போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலை இன்னும் நீடித்தால், எதிர்வரும் காலத்தில், எரிபொருள் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். அதனால், அமெரிக்கா - ஈரான் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு, விரைவில் இந்த பிரச்னை முடிந்தால் மட்டுமே, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள், எரிபொருள் தட்டுப்பாடு பிரச்னையில் இருந்து தப்பிக்க முடியும். ஹார்முஸ் ஜலசந்தி இப்போது திறந்தால் கூட, நிலைமை சரியாக இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article