நல்ல ஸ்கூல்.. தலைமையாசிரியர் அறையில் பீர் பாட்டில்.. ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ., அதிர்ச்சி!

நல்ல ஸ்கூல்.. தலைமையாசிரியர் அறையில் பீர் பாட்டில்.. ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ., அதிர்ச்சி!
News Image

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில் எம்.எல்.ஏ., ஒருவர் ஆய்வுக்கு சென்ற இடத்தில் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

பள்ளிகள் இன்று திறப்பு

தமிழ்நாடு முழுவதும் இரண்டு மாத கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. புது வகுப்பிலும், முதல்முறையாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகமுடன் காணப்படுகின்றனர். பள்ளிகளில் மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு விதமான ஏற்பாடுகளையும் ஆசிரியர், ஆசிரியைகள் செய்துள்ளனர். பள்ளி வளாகம், வகுப்பறை, மாணவர்கள் அமரும் இருக்கை, மேசை உள்ளிட்ட அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு புதிய கல்வியாண்டை வரவேற்றுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படுவதால் கடை வீதிகளிலும், நோட்டு புத்தகங்கள் விற்பனை கடைகளிலும் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் அலைமோதுகிறது. புத்தகப்பை தொடங்கி ஒவ்வொன்றையும் குழந்தைகள் தங்களுக்கு பிடித்தவாறு வாங்கி செல்கின்றனர்.

பல்லாவரம் எம்.எல்.ஏ. ஆய்வு

இந்த சூழலில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குரோம்பேட்டை அரசு பள்ளிகளில் பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். அப்போது பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருந்த விருதுகளைப் பார்வையிட்டார். நன்றாக அதனை உற்றுப் பார்த்தபோது விருதுகள் அடங்கிய ஷோகேஸில் ஸ்வீட் பீர் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

எம்.எல்.ஏ., பீர் பாட்டிலை பார்த்து விட்டார் என தெரிந்ததும் பள்ளி நிர்வாகம் அதனை அப்புறப்படுத்த முயன்றது. ஆனால் அதனைக் கண்டித்த காமாட்சி மீண்டும் அந்த பாட்டிலை அங்கு வைக்க சொல்லி பள்ளி நிர்வாகத்திற்கு பாடம் எடுத்தார்.

உடனடியாக இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார். அதில், மாணவன் ஒருவர் பீர் குடிக்கிறேன் என சொன்னார். எங்கு வாங்குகிறாய், எவ்வளவு ரூபாய் என விசாரித்து பணம் கொடுத்தோம். ஆனால் மாணவன் இந்த ஸ்வீட் பீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்திருந்தான். இது நடந்து ஒரு 6,7 மாதம் இருக்கும். உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் வந்தால் பீர் பாட்டில் மாடலில் இருக்கும் இதனை கடைகளில் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என சொல்வதற்காக ஸ்வீட் பீர் பாட்டிலை வைத்திருந்தோம்” என விளக்கம் கொடுத்தனர்.

Also Read: CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!

அதனை ஏற்க மறுத்த காமாட்சி எம்.எல்.ஏ., இது போன்ற பாட்டில்களை எல்லாம் பள்ளியில் வைக்காதீர்கள். நீங்கள் நல்லது செய்யும் நோக்கில் இதனை வைத்திருந்தாலும் எத்தனையோ அலமாரி இருக்கும்போது விருதுகள் இருக்கும் இடத்தில் வைத்திருக்கிறீர்களே?.. நான் முன்னதாக ஒருமுறை புகார் அளித்து விட்டோம்.  இனிமேல் இந்த மாதிரி செய்யாதீர்கள்” என கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks