அரசு பள்ளி ஆசிரியர் ரூ.250 லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு பாஜக சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வசூலிப்பதா, தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருந்தார்.

250 ரூபாய் சட்டவிரோதமாக லஞ்சம்

குறிப்பாக திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பதினொன்றாம் வகுப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்க ஏழை எளிய மாணவர்களிடம் தலா 250 ரூபாய் சட்டவிரோதமாக லஞ்சம் பெறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் ஆலயங்களான அரசுப் பள்ளிகளிலேயே இத்தகைய ஊழல் முறைகேடுகள் நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

எனினு இது போலிச் செய்தி என்று அரசு தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பரவும் செய்தி:

திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது ஆசிரியர் ரூ.250 லஞ்சம் வசூலித்ததாகக் குறிப்பிட்டு தமிழ்நாடு பாஜக சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

இது முற்றிலும் தவறான தகவல்.

அரசு பள்ளி ஆசிரியர் ரூ.250 லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு பாஜக சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவல்

பரவும் செய்தி:

திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது ஆசிரியர் ரூ.250 லஞ்சம் வசூலித்ததாகக் குறிப்பிட்டு தமிழ்நாடு பாஜக சமூக… pic.twitter.com/g8XdwFlLsL

— TN Fact Check (@tn_factcheck) June 3, 2026

இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளித்துள்ள விளக்கத்தில், “சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்பட்டது.

எதற்காக கட்டணம்?

குறிப்பாக மாணவர்களிடம் பெற்றோர் ஆசிரியர் கழகக் கட்டணமாக ரூ.50, தேர்வுக்கான ரெக்கார்டு கட்டணமாக ரூ.100 மற்றும் விடைத்தாள் கட்டணமாக ரூ.50 என ரூ.200 வசூலிக்க பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழுவால் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ரூ.200 மட்டுமே மாணவர்களிடம் கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது. ரூ.250 கட்டணம் வசூல் என்று வெளியான செய்தி தவறானது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article