Fire Accident: பீகாரில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து:

டெல்லியில் நேற்று உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டவர்கள் உட்பட 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவர் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே பீகாரில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்து இருப்பது மனதை உலுக்கியுள்ளது. முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள பிரசாத் மருத்துவமனை எனும் தனியார் மருத்துவமனையின் ஐசியு பிரிவில் தீ பரவியதால், அடர்த்தியான கரும்புகை கட்டிடத்தின் பெரும் பகுதிகளை விரைவாகச் சூழ்ந்துகொண்டது. இதனால் மருத்துவமனை வளாகத்திற்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பொதுமக்களை கட்டிடத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். தகவலறிந்து அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நோயாளிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகளைத் தொடங்கினர். இருப்பினும் இதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

தீவிர சிகிச்சை பிரிவில் eஎற்பட்ட தீ விபத்திற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் காயமடைந்ததாகவும், அவர்கள் கட்டிடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட நோயாளிகளில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

A purported video of the fire incident at the Bihar hospital has emerged. 10 people are believed to have been killed in the blaze, many others are injured. https://t.co/HAL6CMfa4L pic.twitter.com/2Rp7yRODxW

— Vani Mehrotra (@vani_mehrotra) June 4, 2026

Source: Read Full Article