உன்ன எவன் கோட் போட வேண்டாம்ன்னு சொன்னது? - முதலமைச்சரை ஒருமையில் பேசிய ஆ.ராசா!

உன்ன எவன் கோட் போட வேண்டாம்ன்னு சொன்னது? - முதலமைச்சரை ஒருமையில் பேசிய ஆ.ராசா!
News Image

தமிழ்நாட்டு அரசியலில் பேசாத ஒரு ஆள் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறார் என தவெக தலைவர் விஜயை, திமுக எம்.பி., ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடினார்.

அவர் பேசிகையில், “இந்தியாவே தமிழ்நாட்டை உற்றுப் பார்த்தது. இந்த தமிழ்நாடு இப்படி ஆகிவிட்டதே என நினைக்கிறார்கள். ஒரு அறிவாளியிடம் தோற்றால் பரவாயில்லை. அரசியல் ஆளுமை கிட்ட தோற்றால் பரவாயில்லை. உள்ளபடியாக ஒரு மாற்றம் இருந்தால் பரவாயில்லை.  இப்போது தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது என சொல்கிறார்கள். என்ன கிழிக்கப் போகிறீர்கள். பேசிப் பேசி வளர்ந்த தமிழ்நாட்டு அரசியலில் பேசாத ஒரு ஆள் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறார். அப்படியே பேசினாலும் எங்கு தேவையோ அங்கு பேச மறுக்கிறார். வெளியே வந்தால் கைகளை நீட்டி வீர வசனம் பேசுகிறார். சட்டசபைக்கு போனால் அமைதியாக இருக்கிறார்.

Also Read: Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!

திமுக இயக்கம் இந்த தலைமுறைக்காக மட்டும் சிந்திக்கும் இயக்கமல்ல. கலைஞர் கருணாநிதி எவ்வளவு பெரிய போராளி. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என தகவல் வந்தது. அப்போதும் கூட டெல்லியில் கூட கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்து அந்த செய்தி உண்மையோ, இல்லையோ என தெரியும் முன்பே தனது கருத்தை தெரிவித்தார். ஆனால் இன்றைய முதலமைச்சர் டெல்லியில் கூட மரபை மீறி செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடுகிறார்.

நான் எவ்வளவோ அரசியல் பார்த்திருக்கிறேன். ஒரு பொய்யை இவர்களாக கட்டமைத்து அந்த பொய்க்கு இவர்களாக ஒரு பதில் சொல்கிறார்கள். உதாரணமாக நான் ஏன் கோட் சூட் போடக்கூடாதா என விஜய் கேட்கிறார். உன்ன யாரு போட வேண்டாம் என சொன்னா?.. இவர் கோட் சூட் போட்டதால நாங்க பொறாமையா இருக்குற மாதிரி அவர் பேசும் பேச்சு இருக்கிறது. நீ நல்லா கோட் சூட் போட்டுக்க.. ஒன்னும் பிரச்னை இல்லை.

ஆனால் கருப்பு கலரில் ஏன் போட்டிருக்கிறேன் என விளக்கம் ஒன்றை கொடுத்தார்.  உனக்கு யார் பெரியார் என்று தெரியுமா?.. இதில் கொள்கை தலைவர் என சொல்லிக் கொள்கிறார். மதத்தை தாண்டியவன் நான் என விஜய் சொல்கிறார். நெற்றியில் ஒரு மதம், கையில் ஒரு மதம், பெயருக்கு ஒரு மதம் என எல்லாவற்றையும் ஒரு மதத்துக்குள் கொண்டு வருகிறார். இப்படி ஒரு அயோக்கியத்தனம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது” என ஆ.ராசா கூறியுள்ளார் .

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks