காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை.. திமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்!

காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை.. திமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்!
News Image

டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் நிலையில் திமுக பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் அந்த கூட்டணியில் இருந்து விலகி ஆட்சியமைத்துள்ள தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தது. இதனால் அக்கட்சி மீது திமுக கடுமையான அதிருப்தியைக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நன்றி மறந்து விட்டதாக தொடர்ச்சியாக திமுக தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அழைத்த காங்கிரஸ் - மறுத்த திமுக

இந்த நிலையில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்த நிலையில் அது தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இப்படியான நிலையில் வரும் ஜூன் 8ம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த நிலையில், திமுக அதனை மறுத்துள்ளது. அதேசமயம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் திமுக குரல் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பல்வேறு பிற கட்சிகள் மாநில அளவில் காங்கிரஸுடன் அரசியல் கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்துள்ளன மற்றும் பல்வேறு காலங்களில் எங்களுக்கு எதிராகப் போராடியுள்ளன.  இருப்பினும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிரான பெரிய போராட்டத்தில் அவர்களின் பங்கை நாம் மதிக்கிறோம் மற்றும் கௌரவிக்கிறோம்.

அதனால்தான் பொதுவான ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினைகளில் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.உங்கள் கொள்கையில் நீங்கள் உண்மையாக நேர்மையாக இருந்தால், மே 4 ஆம் தேதி 3 மணி முதல் அன்று அரசியல் வசதிக்காக உங்கள் கொள்கைகளை ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டீர்கள்.

இதையும் படிங்க: திருச்செந்தூரில் நிம்மதியான தரிசனம்.. அமைச்சர் ஆய்வுக்குப் பின் நடந்த மாற்றம்.. வீடியோ வெளியீடு!

காங்கிரஸை கேள்வி கேட்பதற்குப் பதிலாக, பாஜகவுக்கு எதிராக இருப்பதாகக் கூறுபவர்கள் ஏன் எதிர்க்கட்சிகளுடன் உறுதியாக நிற்கத் தயங்குகிறார்கள் என்று கேளுங்கள். பிஜு ஜனதா தளம் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்கத் துணிந்தபோது, அதற்காக காங்கிரஸை  அவர்கள் குறை கூறவில்லை  காங்கிரஸ் கட்சி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக 100% அர்ப்பணிப்புடன் போராடியுள்ளது.

பாராளுமன்றத்தில், தெருக்களில், மற்றும் ஒவ்வொரு ஜனநாயக நிறுவனத்திலும். அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சியை பாதுகாப்பதற்காக நாம் அரசியல் விலையையும் செலுத்தியுள்ளோம். ஒரு விஷயம் தெளிவாக இருக்கட்டும். காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை.  ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக திட்டத்திற்கு எதிராக ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முக்கிய சக்தியாக காங்கிரஸ் தொடர்கிறது. நாங்கள் எங்கள் இலட்சியங்களில் சமரசம் செய்ய மாட்டோம். அவற்றின் பக்கமே உறுதியாக நிற்கிறோம்” என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks