தமிழ்நாடு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய கட்சியை தொடங்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லி சென்ற அவர் அங்கு கட்சி மேலிடத்திடம் ராஜினாமாவை கொடுத்துவிட்டதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, அவரது புதிய கட்சி குறித்த அறிவிப்பு இன்று அவரது பிறந்த நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை 12 மணிக்கு மக்களுடன் சமூக வலைதளம் மூலம் உரையாட உள்ளதாக அவர் கூறியுள்ளது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சென்று ராஜினாமா செய்த அண்ணாமலை.?

நேற்று முன்தினம் டெல்லி சென்ற அண்ணாமலை, கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை சந்தித்தார். அப்போது, அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இந்த செய்திகளை மறுத்தனர்.

மேலும், அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது.? தேர்தலில் தோற்றதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல், அமித் ஷாவும், பாஜக தமிழ்நாடு தற்போதை தலைவர் நயினார் நாகேந்திரனை, உடனடியாக டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும், அவரும் உடனடியாக அங்கு செல்வதாகவும் தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனின் பதவி பறிபோகும் என்ற தகவல்கள் உலா வரத் தொடங்கின. ஆனாலும், அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்காமல், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஏற்கனவே பாஜக தலைமை ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரையே மீண்டும் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவலும் வெளியானது.

இன்று அறிவிப்பு வெளியாகும் என நிலவிய எதிர்பார்ப்பு

முன்னதாக, டெல்லி செல்லும் முன், விமான நிலையத்தில் பேட்டியளித்த அண்ணாமலை, புதிய கட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல், 2 நாட்களில் உங்களை சந்தித்து பேசுகிறேன் என கூறிச் சென்றார். அதனால், இன்று அவர் திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று அவரது பிறந்த நாள் என்பதால், சென்னைக்கு திரும்பி, தனது கட்சியின் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், கட்சி மேலிடம் அவரை அங்கேயே இருக்குமாறு கூறியிருந்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதனால் அவர் சென்னை திரும்பவில்லை என தெரிகிறது.

நாளை மக்களுடன் உரையாடல்

இப்படிப்பட்ட சூழலில், அண்ணாமலை இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், நாளை மதியம் 12 மணி அளவில், சமூக வலைதளங்கள் மூலம் மக்களுடன் நேரடியாக உரையாட உள்ளதாகவும், மனம் திறந்து பேச உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.https://t.co/CuLt12IkQwhttps://t.co/G6dY3wufzqhttps://t.co/rfti0J7ZsLhttps://t.co/xcD9EKje7B

— K.Annamalai (@annamalai_k) June 4, 2026

அண்ணாமலையின் இந்த பதிவால், அவர் நாளை மக்களுடன் உரையாடும் போது, தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் களம் தற்போது புதிய திசையில் பயணிப்பதால், தான் கட்சி தொடங்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அண்ணாமலை எண்ணுவதாக கூறப்படும் நிலையில், நாளை அதை அறிவிப்பாரா.? பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: Read Full Article