போலீஸ்காரர் மனைவி குளிப்பதை படம் எடுத்த சக போலீஸ்காரர்..!!

போலீஸ்காரர் மனைவி குளிப்பதை படம் எடுத்த சக போலீஸ்காரர்..!!

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி போலீஸ் சரகத்தில் உள்ள மொட்டமலையில் 11-வது பட்டாலியன் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு போலீஸ்காரராக பணியாற்றும் திருவேங்கட புரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் தனது மனைவி வீரலட்சுமி ( 27), குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அதே குடியிருப்பில் போலீஸ்காரராக வேலை பார்த்து வரும் மதுரை ஒத்தக்கடை சேர்ந்த ஆனந்த் (38 ) என்பவரும் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீரலட்சுமி அவரது வீட்டின் பாத்ரூமில் குளித்து கொண்டிருக்கும் போது ஆனந்த் தனது செல்போன் மூலம் படம் எடுத்துள்ளார். இதையறிந்த வீரலட்சுமி உடனே கூச்சலிட்டார்

பின்னர் இதுகுறித்து வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும் போலீசாரே இந்த செயலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks