Yercaud Bison Attack : ஏழைகளின் ஊட்டி ஏற்காட்டில் காட்டெருமை மோதியதில் வாலிபர் பலி...!

சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காடு செஞ்திட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன், வயது 23, தகப்பனார் பெயர் கோவிந்தன்.

இருவரும் இருசக்கர வாகனத்தில் சேலம் குப்பனூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குறுக்கே வந்த காட்டெருமை மோதியதில், கிருபாகரன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதை அறிந்த ஏற்காடு காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.ஏற்காடு காவல் ஆய்வாளர் ரஜினி .தலைமையில் காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk