சேலம்:
பாரம்பரியமிக்க ஆரோக்கியமான உணவுகளை மக்கள் மறந்து வரும் நிலையில், அவர்களிடம் பாரம்பரிய உணவுகளின் நன்மைகளை கொண்டு சேர்க்கும் விதமாக
சேலத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கிடையில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் இருந்து 20 வட்டாரங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டு சோளப் பணியாரம்,தினை லட்டு, குதிரைவாலி,பொங்கல் மூங்கில், அரிசி பாயாசம், எள்ளு உருண்டை உள்ளிட்ட நவ தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் காய்கறி மற்றும் கீரைகளால் தயாரிக்கப்படும் உணவுகளை தயாரித்து சுமார் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தி இருந்தனர்.
சிறப்பான முறையில் உணவுப் பொருட்களைத் தயாரித்த மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர், உதவி இயக்குனர் உள்ளிட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.