சென்னை:
“EVM ஐ தடை செய்து வாக்குசீட்டில் தேர்தல் நடந்தால் மட்டுமே இந்தியாவில் பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தமுடியும்” என துண்டுப்பிரசுரம் கொடுத்ததற்காக திமுக அரசின் காவல்துறையால் கடந்த 28.02.2022 அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நானும் என் தங்கை நிரஞ்சனாவும் 19 நாள் சிறை வாசத்துக்கு பிறகு கடந்த 18.03.2022 அன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டோம்.
நாங்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் ஜாமீனில் விடுவிக்கப் பட்டால் மீண்டும் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஆகவே எங்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் திமுக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நாங்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் 30 நாட்கள் சென்னையிலேயே தங்கியிருந்து தினமும் நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஒரு வாரமாக தினமும் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறோம். வருகிற 17.04.2022 வரை தினமும் கையெழுத்து போட வேண்டியுள்ளது.
எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் திமுக அரசு எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது.
பாசிச பாஜக ஆட்சிக்கு எதிராக நாங்கள் நடத்தும் போராட்டங்களை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு மிகவும் மெனக்கெடுகிறது.
பாசிச பாஜக -RSS கும்பலுக்கு அடிபணிந்து சேவகம் செய்வதில் திமுக அரசு அதிமுக வையும் மிஞ்சி விடும் போல..
– நந்தினி ஆனந்தன்