சேலம்:
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உறுதிமொழி ஏற்று, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சேலம் மாநகராட்சியில் திமுக -50 , அதிமுக -7, மற்றும் சுயேட்சை -3 ஆகிய இடங்களில் வெற்றிப்பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்.ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர் இருக்கும் 35 வினாடிகள் பதவிப் பிரமாணம் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
மாநகராட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள்,ஆதரவாளர்கள் உள்ளே அனுமதிக்காமல் வெளியே காணொலிக் காட்சி மூலமாக பதவியேற்பு விழாவை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இதையடுத்து வருகிற 4-ந் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்,
பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் தயார் நிலையில் உள்ளது.